விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன்.. தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியான சோகம்!
2 Year Old Drowns in Water Tank | திருவண்ணாமலையில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் தொட்டியில் இருந்து சிறுவனை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பலியான சிறுவன்
திருவண்ணாமலை, ஜூலை 17 : திருவண்ணாமலையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன், தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தவறுதலாக தண்ணீர் தொட்டியில் விழுந்த நிலையில் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தண்ணீர் தொட்டியில் இருந்து சிறுவனை மீட்டர் அக்கம் பக்கத்தினர், சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து பரிதாப பலி
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த காட்டுப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் பழனி. கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி பார்கவி என்று மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் பிரவீனா என்ற ஒரு பெண் குழந்தையும், முகிலன் என்ற இரண்டு வயது ஆண் குழந்தையும் ஒன்றும் இருந்துள்ளது. இந்த நிலையில் பழனியின் மகன் முகிலன் நேற்று முன்தினம் (ஜூலை 15, 2025) வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். சிறுவன் வெளியே விளையாடிக் கொண்டிருப்பதை வீட்டில் இருந்த யாரும் கவனிக்காமல் இருந்துள்ளனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்த சிறுவன்
இந்த நிலையில், விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளார். இந்த நிலையில், சிறுவனை காணவில்லை என அவரது தாய் பார்கவி, வீட்டை சுற்றி தேடி உள்ளார். அப்போது சிறுவன் தண்ணீர் தொட்டியில் மூச்சுப் பேச்சு இல்லாமல் மயங்கி கிடப்பதைக் கண்டு அவர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார். இந்த நிலையில் முகிலனை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : சென்னையில் சோகம்: தைலம், கற்பூரம் தேய்த்ததால் மூச்சுத்திணறி உயிரிழந்த 8 மாதக் குழந்தை
பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
இதனால் மனமுடைந்து போல பார்கவி கதறி அழுதுள்ளார். இது காண்போரின் மனதை உலுக்கும் விதமாக இருந்துள்ளது. இந்த நிலையில், தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.