அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை – எவ்வளவு தெரியுமா?
Commercial Gas Cylinder Price Reduced in Chennai | சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் தற்போது வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை என்னவாக உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை, மே 1 : சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை (Commercial Gas Cylinder Price) ரூ.15.50 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் தற்போது ரூ.1906-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் (Domestic Gas Cylinder Price) விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் தற்போது வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை என்னவாக உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒவ்வொரு மாதமும் மாற்றம் செய்யப்படும் கேஸ் சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும். காரணம், மாத தொடக்கத்தில் எண்ணெய் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் நிலையில், அதன் எதிரொலியாக கேஸ் சிலிண்டர்களின் விலை குறையவும், அதிகரிக்கவும் செய்யும். அதன்படி 2025, மே மாதம் இன்று (மே 1, 2025) தொடங்கிஇன்றைய தங்க விலை சென்னையுள்ள நிலையில் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேச் சிலிண்டர் விலையில் ரூ.15.50 குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ. 1921.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், விலை குறைப்பால் தற்போது ரூ.1906-க்கு விற்பனை செப்பப்படுகிறது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்படுள்ள நிலையில், வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. 2025, ஏப்ரல் மாதம் வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்ட நிலையில் ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.868 ஆக உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று (மே 1, 2025) வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டு உபயோக சிலிண்டருக்கான கேஸ் சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.868-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.