Most Sixes in International Cricket: ரோஹித் முதல் தோனி வரை! சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்..!
Record-Breaking Sixes: ரோஹித் சர்மா, கிறிஸ் கெயில் என பல கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் சிக்ஸர்கள் அடிக்கும் வீரர்களாக பெயர் பெற்றவர்கள். இந்தநிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

கிரிக்கெட்டில் ஒவ்வொரு வடிவத்தில் அதிரடியாக கிரிக்கெட் விளையாடும் சில பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டியாக இருந்தாலும் சரி. ஆரம்பம் முதலே அதிரடியாக பேட்டிங் செய்து சிக்ஸரும், பவுண்டரிகளாக பறக்க விடுவார்கள். உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஸ்டேடியத்திற்கு வெளியே அடிக்கப்படும் சிக்ஸர்களை அதிகம் விரும்புகிறார்கள். இது மாதிரியான பவர் ஹிட்டிங் எப்போதும் கிரிக்கெட்டில் முக்கிய பகுதியாக இருந்து வருகிறது. ரோஹித் சர்மா (Rohit Sharma), கிறிஸ் கெயில் (Chris Gayle) என பல கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் சிக்ஸர்கள் அடிக்கும் வீரர்களாக பெயர் பெற்றவர்கள். இந்தநிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
1. ரோஹித் சர்மா (இந்தியா) – 634 சிக்ஸர்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் ரோஹித் சர்மா, தனது அதிரடி சிக்ஸர்களின் மூலம் ஹிட்மேன் என்ற பெயரை பெற்றவர். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அதாவது, ஒருநாளில் 344 சிக்ஸர்களும், டெஸ்ட் போட்டிகளில் 88 சிக்ஸர்களும், டி20யில் 205 சிக்ஸர்கள் என அனைத்து வடிவங்களிலும் சேர்த்து மொத்தம் 634 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
2. கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) – 553 சிக்ஸர்கள்
“யுனிவர்ஸ் பாஸ்” என்று செல்லமாக கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கிறிஸ் கெயில், கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவர். 1999ம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை கிறிஸ் கெயில் சர்வதேச கிரிக்கெட்டில் 553 சிக்ஸர்களை பதிவு செய்துள்ளார்.
3. ஷாஹித் அப்ரிடி (பாகிஸ்தான்) – 476 சிக்ஸர்கள்
“பூம் பூம்” என்று அன்பாக அழைக்கப்படும் ஷாஹித் அப்ரிடி, தனது தனித்துவமான அதிரடி பேட்டிங்கால் பாகிஸ்தான் அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்துள்ளார். அப்ரிடி கடந்த 1996ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் 476 சிக்ஸர்களை அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.
4. பிரெண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து) – 398 சிக்ஸர்கள்
தனது அதிரடி பேட்டிங்கில் நியூசிலாந்து அணியின் அணுகுமுறையை மாற்றியமைத்ததில் முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் முக்கிய பங்கு உள்ளது. கடந்த 2002ம் ஆண்டு முதல் 2016 வரை பிரெண்டன் மெக்கல்லம் நியூசிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 398 சிக்ஸர்களை அடித்துள்ளார். மெக்கல்லமின் அச்சமற்ற பேட்டிங், நியூசிலாந்து அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்துள்ளது.
5. மார்ட்டின் கப்தில் (நியூசிலாந்து) – 383 சிக்ஸர்கள்
நியூசிலாந்து அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்துள்ள மார்ட்டின் குப்தில், 2009 ஆம் ஆண்டு அறிமுகமானதிலிருந்து பல சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். நியூசிலாந்து அணிக்காக 2009ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை விளையாடியுள்ள மார்ட்டின் கப்தில், சர்வதேச கிரிக்கெட்டில் 383 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
6. எம்.எஸ். தோனி (இந்தியா) – 359 சிக்ஸர்கள்
முன்னாள் இந்திய கேப்டனும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான எம்.எஸ். தோனி, இந்திய அணிக்காக 3 ஐசிசி பட்டங்களை வென்று கொடுத்துள்ளார். 2004 மற்றும் 2019 க்கு இடையில், தோனி சர்வதேச கிரிக்கெட்டில் 359 சிக்ஸர்களை அடித்தார். தற்போது ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ்.தோனி விளையாடி வருகிறார்.