தென்னாப்பிரிக்காவை ஓட விட்ட இங்கிலாந்து.. அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 342 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 414 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ஜோ ரூட் மற்றும் ஜேக்கப் பெத்தல் சதமடித்தனர். தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சும் பேட்டிங்கும் மிகவும் மோசமாக இருந்ததே தோல்விக்கு காரணமாக அமைந்தது.

தென்னாப்பிரிக்காவை ஓட விட்ட இங்கிலாந்து.. அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

தென்னாப்பிரிக்கா vs இங்கிலாந்து

Updated On: 

08 Sep 2025 08:25 AM

 IST

சவுத்தாம்ப்டன், செப்டம்பர் 8: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா மோசமான தோல்வியை சந்தித்ததால் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். இந்த வெற்றியில் மூலம் இங்கிலாந்து மகத்தான சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இரு அணிகளும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் வந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அது எவ்வளவு பெரிய தவறு என்பதை கேப்டன் தெம்பா பவுமா உணர்ந்திருப்பார். காரணம் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன்களை குவித்தனர்.

மோசமாக பந்து வீசிய தென்னாப்பிரிக்கா

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜேமி ஸ்மித் 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.  பென் டக்கட் 31 ரன்கள் எடுத்தார்.  தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் மற்றும் ஜேக்கப் பெத்தல் ஆகியோர் சதமடித்து அசத்தினர். இறுதி கட்டத்தில் ஜோஸ் பட்லர் 62 ரன்கள் விளாச இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 414 ரன்கள் குவித்தது.  தென்னாபிரிக்க அணி தரப்பில் பந்து வீசிய  பவுலர்களில் டெவால்ட் பிரேவிஸ் தவிர மற்றவர்கள் 50 ரன்கள் மேலாக வாரி வழங்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

குறிப்பாக நான்ரே பர்கர் 10 ஓவர்கள் வீசி 95 ரன்கள் விட்டுக் கொடுத்தும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. அதேபோல் கோடி யூசுப் 80 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட்டுகள் எதையும் கைப்பற்றாததால் பெரும் அதிருப்தி ஏற்பட்டது.

Also Read:  1984 முதல் 2023 வரை.. ஆசியக் கோப்பை பைனலில் ஆட்ட நாயகன் விருதை வென்றவர்கள்..!

பேட்டிங் அதை விட மோசம்

இதனை தொடர்ந்து 415 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தென்னாப்பிரிக்க அணில் களமிறங்கியது. இதுபோன்ற போட்டிகளில் சில நேரங்களில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று விடும் என்பதால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் அந்த அணியில் ஒரு வீரர்கள் கூட நிலைத்து நின்று ஆடவில்லை. அதிகபட்சமாக கார்பின் போஷ் 20 ரன்கள் எடுத்தார். இவரைத் தொடர்ந்து கேசவ் மகாராஜ் 17 ரன்கள், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 10 ரன்களும் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்க அணி 20.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 72 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 342 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. பந்துவீச்சை பொறுத்தவரை அந்த அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் 4 விக்கெட்டுகளையும், அடில் ரஷீத் மூன்று விக்கெட்டுகளையும், பிரைடன் ஹார்ஸ் இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது.\

Also Read:  விலகிய ட்ரீம் 11.. ஸ்பான்சராக வர ஆர்வம் காட்டும் பெரிய நிறுவனம்.. பிசிசிஐ முடிவு என்ன?

இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டு டிரென்ட் பிரிட்ஜில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. இதன்மூலம் 2023ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக இந்தியா பெற்ற 317 ரன்கள் வித்தியாசத்திலான மிகப்பெரிய வெற்றியை இங்கிலாந்து முறியடித்தது. ஆட்டநாயகனாக ஜோப்ரா ஆர்ச்சரும், ஒருநாள் தொடரின் சிறந்த வீரராக கேசவ் மகாராஜூம் தேர்வு செய்யப்பட்டனர்.

Related Stories
IPL 2026: ஐபிஎல் 2026 சீசனில் காத்திருக்கும் ட்விஸ்ட்! மாற்று வீரர்களின் எதிர்காலம் என்ன? தக்கவைக்கப்படுவார்களா?
Asia Cup hockey: ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன்.. இந்திய ஆண்கள் அணிக்கு குவியும் வாழ்த்து!
BCCI : 5 வருடங்களில் இத்தனை கோடிகளா? பணமழையில் நனையும் பிசிசிஐ.. கையிருப்பு குறித்து வெளியான தகவல்!
Rohit Sharma: விநாயகர் வழிபாட்டின்போது ரசிகர்கள் செய்த செயல்.. கடுப்பாகி கையெடுத்து கும்பிட்ட ரோஹித் சர்மா!
Next BCCI President: பிசிசிஐ தலைவருக்கு 3 முக்கிய நிர்வாகிகள் போட்டி.. தேர்தல் எப்போது..? BCCI செயலாளர் விளக்கம்!
Hardik Pandya New Look: ஆசியக் கோப்பைக்காக மாஸ் லுக்.. புது ஹேர் ஸ்டைலில் உலா வரும் ஹர்திக் பாண்ட்யா!