விளையாட்டில் அரசியல் கலக்கக்கூடாது – காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேச்சு!
2025 ஆசியக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேசினார். அப்போது பேசிய அவர், “விளையாட்டையும் அரசியலையும் கலக்கக் கூடாது என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். நமது எதிரிகளையோ அல்லது போட்டிகளில் நாம் விளையாடும் அணிகளையோ தேர்ந்தெடுக்க நமக்கு உரிமை இல்லை. ஒரு போட்டியில் நுழைந்தவுடன், நாம் யாரை எதிர்த்து விளையாடினாலும் அவர்களுடன் விளையாடக் கடமைப்பட்டுள்ளோம். இது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, அனைத்து விளையாட்டுகளுக்கும் பொருந்தும்” என்றார்.

Published on: Sep 15, 2025 11:33 PM