Padmanabhaswamy Temple: கேரளா பத்மநாப சுவாமி கோயிலில் தரிசன நேரம் மாற்றம்
கேரளாவில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் ஜூலை 10 முதல் 16 வரை ஆனி களபாபிஷேகம் காரணமாக தரிசன நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. காலை 8.30 முதல் 10 மணி வரை தரிசனம் கிடையாது. மற்ற நேரங்களில் தரிசனம் உண்டு. மாற்றப்பட்ட தரிசன நேரங்கள் கோயில் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்மநாப சுவாமி கோயில்
கேரளாவில் (Kerala) உள்ள புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில் (Sree Padmanabhaswamy Temple) 2025, ஜூலை 10 ஆம் தேதி முதல் தரிசன நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 2025, ஜூலை 16 ஆம் தேதி வரை இந்த தரிசன நேர மாற்றம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலில் ஆனி களபாபிஷேகம் நடைபெறுவதால் இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025, ஜூலை 10 ஆம் தேதியான இன்று முதல் காலை 8.30 மணி முதல் காலை 10 மணி வரை தரிசனம் கிடையாது என தெரிவிக்கப்பாட்டுள்ளது. அதேசமயம் மற்ற தரிசன நேரங்களில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்கள் பயண நேரத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தரிசனம் நேரம் இதுதான்
இந்த ஒரு வாரம் தரிசன நேரங்களாக அதிகாலை 3.30 மணி முதல் மாலை 4.45 மணி வரையும், காலை 6.30 மணி முதல் மாலை 7 மணி வரையும், காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் மாலை 6.15 மணி வரையும் மற்றும் மாலை 6.45 மணி முதல் இரவு 7.20 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: திருச்செந்தூர் கோயில் கோபுரத்தில் இத்தனை சிறப்புகளா?
கோயில் தந்திரி தலைமையில் இன்று (ஜூலை 10) முதல் ஜூலை 16 ஆம் தேதி வரை ஆனி களபாபிஷேகம் நடைபெறும் என்று கோயில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஜூலை 16 ஆம் தேதி இரவு 8 மணிக்கு கார்க்கிடக ஸ்ரீபலி மற்றும் கீர்த்தனை நடைபெறும். கோயில் தரிசனம் உள்ளிட்ட விவரங்கள் கோயில் வலைத்தளத்திலும், மதில்லக அலுவலகத்திலும் கிடைக்கும் என்று திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயில், அம்மாநிலத்தின் மிக முக்கிய கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூரில் இருந்தும், வெளியூரில் இருந்தும் வருகை தருவார்கள். கடந்த ஜூன் மாதம், 275 ஆண்டுகளுக்குப் பின் பத்மநாபசுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. வெகுவிமரிசையாக நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
Also Read: இட்லி பூவில் விசேஷ அர்ச்சனை.. செல்வ வளம் அருளும் முருகன் கோயில்!
கோயிலின் சிறப்புகள்
வரலாற்று சிறப்புமிக்க பத்மநாப சுவாமி கோயிலில் மர்ம முடிச்சுகளும் நிறைந்தது. இக்கோயில் 10வது நூற்றாண்டுகளிலேயே உருவானதாக சொல்லப்படுகிறது. இந்த கோயிலில் மூலவராக விஷ்ணுவின் அம்சமாக ஸ்ரீபத்மநாதசுவாமி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இந்த கோயிலில் விஷ்ணு நின்று, சயனம், அமர்ந்த கோலத்தில் மூன்று உருவமாக காட்சிக் கொடுக்கிறார். மேலும் இந்த கோயிலில் கிருஷ்ணர், ஐயப்பன், விநாயகர், ஆஞ்சநேயர், நரசிம்மர் ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர். இந்த கோயிலில் வழிபடுவதற்கென சில விதிமுறைகள் உள்ளது.