வாழ்க்கையில் வெற்றி வேண்டுமா? – இந்த 6 விஷயத்தில் தாமதம் வேண்டாம்!

சாணக்யர் எழுதிய சாணக்ய நீதியில் தற்போதைய காலத்தில் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களையும், வழிகாட்டுதல்களையும் நமக்களிக்கிறது. நேரத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் ஆச்சார்ய சாணக்கியர் ஆறு வேலைகளை தாமதப்படுத்துவது தோல்விக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார். சரியான நேரத்தில் சரியான விஷயங்களைச் செய்பவர்கள் மட்டுமே வெற்றியை அடைகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் வெற்றி வேண்டுமா? - இந்த 6 விஷயத்தில் தாமதம் வேண்டாம்!

ஆச்சார்ய சாணக்கியர்

Updated On: 

26 Sep 2025 14:33 PM

 IST

வாழ்க்கையில் நேரம்தான் மிகப்பெரிய சொத்து என்று ஆச்சார்ய சாணக்கியர் உறுதியாக கூறியுள்ளார். சரியான நேரத்தில் சரியான விஷயங்களைச் செய்பவர்கள் மட்டுமே வெற்றியை அடைகிறார்கள், அதன் மூலம் சமூகத்தில் மரியாதை பெறுகிறார்கள். இருப்பினும், முக்கியமான பணிகளைத் தள்ளிப்போடுபவர்களின் வாழ்க்கை படிப்படியாக போராட்டத்தாலும் தோல்வியாலும் நிறைந்ததாகிவிடும். சில பணிகளைத் தாமதப்படுத்துவது அழிவுக்குச் சமம் என்று சாணக்கிய நீதி தெளிவாகக் கூறுகிறது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

சாணக்ய நிதியின்படி, அறிவு என்பது ஒரு நபரிடம் உள்ள மிகப்பெரிய செல்வம். அதனை யாரும் பறிக்க முடியாது. ஒரு நபர் சரியான நேரத்தில் கல்வி பெறவில்லை என்றால், அவர் பிற்காலத்தில் வருத்தப்பட வேண்டியிருக்கும். கல்வி என்றைக்கும் கைக்கொடுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையாகும். அதனை கஷ்டப்பட்டாவது கற்றுக்கொள்ளுங்கள்.

ஆச்சார்ய சாணக்கியர் சரியான வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கிறார். தாமதமான திருமணம் சமூக ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் பிரச்சினைகளை அதிகரிக்கிறது. அதேசமயம் குடும்ப பொறுப்புகள் குறித்த புரிதலையும், எதிர்கொள்ளும் தைரியத்தையும் நமக்கு அளிக்கும்.

இதையும் படிங்க: வாழ்க்கையில் நல்லா இருக்க ஆசையா?  இதெல்லாம் கண்டிப்பா செய்யுங்க!

தற்காலத்தில் குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு பல காரணம் கூறப்பட்டாலும் அது தனிப்பட்ட உரிமையாக பார்க்கப்படுகிறது. குழந்தைகள் சரியான நேரத்தில் பிறக்க வேண்டும் என்று சாணக்ய நிதி அறிவுறுத்துகிறது. குழந்தைகள் பிறப்பதில் தேவையற்ற தாமதம் பிற்காலத்தில் உடல்நலம் மற்றும் உறவுகளில் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

அதேபோல் கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒருபோதும் தள்ளிப்போடக்கூடாது என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார். ஒருவேளை கடனைத் திருப்பிச் செலுத்துவதில் நீங்கள் தாமதித்தால், அது உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களைத் துன்புறுத்தும் ஒரு சுமையாக மாறும். அது உங்கள் நற்பெயரையும் கெடுக்கும். குடும்ப உறுப்பினர்களிடையேயோ அல்லது உங்களை சுற்றி இருப்பவர்களிடையே எதிர்மறை எண்ணங்கள் இருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற முயற்சிக்க வேண்டும். அதேபோல், பகைமை இருந்தால், அதை காலப்போக்கில் பேசி தீர்க்க வேண்டும். இதுபோன்ற விஷயங்களை தாமதப்படுத்துவது பெரிய நெருக்கடிக்கு வழிவகுக்கும். அதேபோல் தாக்குவது, அவமரியாதை செய்வதை காட்டிலும், தவறை உணர செய்வதும், உணர்ந்து மன்னிப்பு கேட்பது தவறில்லை என சாணக்கியர் கூறுகிறார்.

இதையும் படிங்க: திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வேண்டுமா?  இதோ டிப்ஸ்!

சாணக்கிய நிதியின்படி, மத மற்றும் புனிதமான செயல்களை ஒருபோதும் ஒத்திவைக்கக்கூடாது. ஏனெனில் வாய்ப்பை தவறவிட்டால், வருத்தம் மட்டுமே எழும். வாழ்க்கை முழுமையடையாமல் இருக்கும். மேலே குறிப்பிடப்பட்ட இந்த ஆறு பணிகளையும் தாமதப்படுத்தாத ஒருவர் வாழ்க்கையில் மகிழ்ச்சி, மரியாதை மற்றும் வெற்றியின் உச்சத்தை அடைவார்.