இந்திய ரூபாய் நோட்டுகளில் இருக்கும் கோடுகளுக்கு அர்த்தம் என்ன? | TV9 Tamil News

இந்திய ரூபாய் நோட்டுகளில் இருக்கும் கோடுகளுக்கு அர்த்தம் என்ன?

Published: 

26 Apr 2026 20:57 PM

 IST

What Is The Meaning Of Black Lines In Indian Rupee | இந்திய ரூபாய் நோட்டுகளில் கருப்பு நிற கோடுகள் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த கருப்பு நிற கோடுகளின் அர்த்தம் என்ன, அவை எதற்கு பயன்படுத்தப்படுகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா.

1 / 5ரூபாய் நோட்டுகளை நாம் நமது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகிறோம். அந்த ரூபாய் நோட்டுகளில் காந்தியின் புகைப்படம், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரின் கையொப்பம் என சில விஷயங்கள் குறித்து தெரிந்து வைத்திருப்போம். ஆனால், இந்திய ரூபாய் நோட்டுகளில் உள்ள ஒரு முக்கிய அம்சம் குறித்து பலருக்கும் தெரியாது. 

ரூபாய் நோட்டுகளை நாம் நமது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகிறோம். அந்த ரூபாய் நோட்டுகளில் காந்தியின் புகைப்படம், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரின் கையொப்பம் என சில விஷயங்கள் குறித்து தெரிந்து வைத்திருப்போம். ஆனால், இந்திய ரூபாய் நோட்டுகளில் உள்ள ஒரு முக்கிய அம்சம் குறித்து பலருக்கும் தெரியாது. 

2 / 5

அதாவது, இந்திய ரூபாய் நோட்டுகளின் ஓரத்தில் கருப்பு நிறத்தில் சில கோடுகள் இருக்கும். இந்த கோடுகள் எதற்காக உள்ளது என்பது குறித்து பலருக்கும் தெரியவில்லை. ஆனால், இந்த கோடுகளுக்கு பின்னால் முக்கியமான ஒரு விஷயம் உள்ளது. இந்த நிலையில், இந்திய ரூபாய் நோட்டுகளில் ஓரங்களில் உள்ள கருத்து கோடுகளின் பொருள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

3 / 5

இந்திய ரூபாய் நோட்டுகளில் வலது மற்றும் இடது ஓரங்களில் இருக்கும் கருப்பு நிற கோடுகள் பிளீட் மார்க்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இந்த கோடுகளை பலரும் கண்டுக்கொள்ளாமல் இருப்பர். ஆனால், பார்வையற்றவர்களுக்கு இது மிக முக்கியாமன மற்றும் அவசியமான அம்சமாக உள்ளது.

4 / 5

அதாவது பார்வையவற்றவர்கள் எளிதில் அடையாளம் காண்பதற்காக தான் இந்த கருப்பு நிற கோடுகள் கொடுக்கப்படுகின்றன. பார்வைத்திறன் குறைவாக உள்ளவர்கள் ரூபாய் நோட்டுகளை தொட்டு பார்ப்பதன் மூலமே அது எத்தனை ரூபாய் என்பது அவர்களுக்கு தெரிய வந்துவிடும். 

5 / 5

இதற்காக இந்த கோடுகள் பார்ப்பதற்கு லேசானதாக இருந்தாலும், அவற்றை தொட்டு பார்க்கும்போது எளிதாக உணர முடியும். அந்த கோடுகளை சாதாரண அச்சாக இல்லாமல், காகிதத்தில் சற்று மேடாக தெரியும். இது இன்டாலிகோ அச்சு முறையை பயன்படுத்தி அச்சிடப்படுகிறது.  

Follow Us