Thiruvottiyur Constituency Election 2026: தொழிற்சாலைகளால் நிறைந்த திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி.. களம் யாருக்கு சாதகம்? | TV9 Tamil News

Thiruvottiyur Constituency Election 2026: தொழிற்சாலைகளால் நிறைந்த திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி.. களம் யாருக்கு சாதகம்?

Published: 

16 Mar 2026 21:41 PM

 IST

திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியை எடுத்துக்கொண்டால், முக்கியமாக திருவொற்றியூர், காசிமேடு, எர்ணாவூர், கத்திவாக்கம், காலாடிப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்குகின்றன. இந்த திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி சென்னை வடக்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. இந்தத் தொகுதி பொதுத் தொகுதியாகும்.

1 / 6திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியை எடுத்துக்கொண்டால், முக்கியமாக திருவொற்றியூர், காசிமேடு, எர்ணாவூர், கத்திவாக்கம், காலாடிப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்குகின்றன. இந்த திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி சென்னை வடக்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. இந்தத் தொகுதி பொதுத் தொகுதியாகும்.

திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியை எடுத்துக்கொண்டால், முக்கியமாக திருவொற்றியூர், காசிமேடு, எர்ணாவூர், கத்திவாக்கம், காலாடிப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்குகின்றன. இந்த திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி சென்னை வடக்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. இந்தத் தொகுதி பொதுத் தொகுதியாகும்.

2 / 6

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால், திமுக வேட்பாளர் சங்கர் கிட்டத்தட்ட 88,185 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் கே. குப்பன் 50,524 வாக்குகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. திமுக வேட்பாளர் சங்கர் கிட்டத்தட்ட 37,661 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சியும், நான்காவது இடத்தில் மக்கள் நீதி மய்யமும் இருந்தது குறிப்பிடத்தக்கது. திருவொற்றியூர் தொகுதியை பொருத்தவரையில் திமுகவின் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. 1977 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தத் தொகுதியில் திமுக ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக நான்கு முறை வெற்றி பெற்றுள்ளது.

3 / 6

திருவொற்றியூர் தொகுதி வடசென்னையின் முக்கிய தொழிற்சாலை மற்றும் துறைமுகப் பகுதியில் அமைந்துள்ளது. தொழிலாளர் மற்றும் மீனவர் சமூகங்கள் அதிகமாக வசிக்கும் தொகுதியாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்தத் தொகுதியில் திமுகவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவின் வெற்றி வாய்ப்பு சற்றே அதிகமாக இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.

4 / 6

எனினும் இந்தத் தொகுதியில் முக்கிய பிரச்சனையாக மீனவர் சமூகங்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சனைகள் குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக மீனவர் வாழ்க்கை மற்றும் துறைமுகம் தொடர்பான சிக்கல்கள் இதில் அடங்குகின்றன. அதனைத் தொடர்ந்து தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் காற்று மாசு மற்றும் நீர் மாசு அதிகமாக இருப்பதாகவும், அதற்கு தொழிற்சாலைகளுக்கு தகுந்த கட்டுப்பாடுகள் அரசு தரப்பில் விதிக்கப்படவில்லை எனவும் மக்கள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. தொழிற்சாலை மாசு காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.

5 / 6

திருவொற்றியூர் தொகுதியை பொருத்தவரையில் நாம் தமிழர் கட்சி தரப்பில் சத்திய பாஸ்கர் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை.

6 / 6

இந்த சூழலில் புதிதாக களம் காணும் தமிழக வெற்றி கழகமும் இந்தப் போட்டியில் இணைந்துள்ளது. மக்களிடம் அதிமுக மற்றும் திமுகவிற்கு இருக்கும் ஆதரவுடன், இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்களிப்போர் மத்தியில் தமிழக வெற்றி கழகத்திற்கும் ஒரு அளவு ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow Us