ஸ்ரீ ராம நவமி 2026.. விரத முறையும்.. வழிபாட்டு நேரமும்.. முழு விவரம்.. | TV9 Tamil News

ஸ்ரீ ராம நவமி 2026.. விரத முறையும்.. வழிபாட்டு நேரமும்.. முழு விவரம்..

Updated On: 

26 Mar 2026 14:38 PM

 IST

Rama Navami 2026: 'ராமா' என்ற சொல்லுக்கு 'மகிழ்ச்சியைத் தருபவர்' என்று பொருள். தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்ட விஷ்ணு எடுத்த இந்த அவதாரம், ஒவ்வொரு மனிதனும் தன் கடமைகளை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைக் கற்பிக்கிறது. எங்கு ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கு ஆஞ்சநேயர் அரணாக இருந்து காப்பார் என்பது ஐதீகம்.

1 / 5ஸ்ரீ ராம நவமி என்பது மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ஸ்ரீ ராமர் அவதரித்த திருநாளாகும். இறைவனே மனிதனாகப் பூமிக்கு வந்து, இன்ப துன்பங்களைச் சமமாக எதிர்கொள்வது எப்படி என்பதை வாழ்ந்து காட்டிய அவதாரம் இது. ஸ்ரீ ராமபிரான் அவதரித்த 'ஸ்ரீ ராம நவமி' திருநாள் 2026 மார்ச் 27 அன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, ஒருதார மணம், பகைவனுக்கும் அருள்வது போன்ற உயரிய பண்புகளை உலகுக்கு உணர்த்தியவர் ராமர். ஒரு மனிதன் தன் வாழ்வில் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்த 'மரியாத புருஷோத்தமன்' ராமரை வழிபடும் முறைகளை இங்கே காண்போம்.

ஸ்ரீ ராம நவமி என்பது மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ஸ்ரீ ராமர் அவதரித்த திருநாளாகும். இறைவனே மனிதனாகப் பூமிக்கு வந்து, இன்ப துன்பங்களைச் சமமாக எதிர்கொள்வது எப்படி என்பதை வாழ்ந்து காட்டிய அவதாரம் இது. ஸ்ரீ ராமபிரான் அவதரித்த 'ஸ்ரீ ராம நவமி' திருநாள் 2026 மார்ச் 27 அன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, ஒருதார மணம், பகைவனுக்கும் அருள்வது போன்ற உயரிய பண்புகளை உலகுக்கு உணர்த்தியவர் ராமர். ஒரு மனிதன் தன் வாழ்வில் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்த 'மரியாத புருஷோத்தமன்' ராமரை வழிபடும் முறைகளை இங்கே காண்போம்.

2 / 5

முக்கிய நேரங்கள்:இந்த ஆண்டு நவமி திதியும், புனர்பூச நட்சத்திரமும் இணைந்து வரும் மார்ச் 27, வெள்ளிக்கிழமை அன்று ராம நவமி கொண்டாடப்படுகிறது. மார்ச் 26, நண்பகல் 12,27 மணிக்கு நவமி திதி தொடங்கினாலும், நட்சத்திர ரீதியாக வைஷ்ணவ முறைப்படி மார்ச் 27 அன்று வழிபாடு செய்வது உகந்தது. சிலர், ராமர் நண்பகலில் அவதரித்தவர் என்பதால், மார்ச் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களுமே வழிபாட்டிற்கு உகந்தது என கூறுகிறார்கள்.

3 / 5

அயோத்தியில் 'சூரிய திலகம்: இந்த ஆண்டு அயோத்தி ராம ஜென்மபூமி கோவிலில் ஒரு மிகப்பெரிய அறிவியல் மற்றும் ஆன்மீக அதிசயம் நிகழ உள்ளது. நண்பகல் சரியாக 12:00 மணிக்கு, சூரிய கதிர்கள் நேரடியாக 'ராம் லல்லா' சிலையின் நெற்றியில் விழுமாறு 'சூரிய திலகம்' நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 4 நிமிடங்கள் வரை நீடிக்கும். சூரிய வம்சத்தில் பிறந்த ராமருக்கு, சூரிய பகவானே திலகமிடுவதாக இது போற்றப்படுகிறது.

4 / 5

தென்னிந்தியாவில் 'கல்யாணோற்சவம்': தமிழகம் மற்றும் ஆந்திராவில் ராம நவமி அன்று 'சீதா ராம கல்யாணம்' மிகச்சிறப்பாக நடைபெறும். கோடை காலத்தின் தொடக்கத்தில் இந்த விழா வருவதால், உடலைக் குளிர்விக்கும் பானகம் (வெல்லம், சுக்கு, மிளகு கலந்தது) மற்றும் நீர்மோர் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ராம நவமி அன்று சிறப்புப் புறப்பாடுகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும். ராமர், ரங்கநாதரின் அவதாரம் என்பதால் இங்குள்ள 'ஸ்ரீ ராமபிரான்' சன்னதியில் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறும்.

5 / 5

ராம நவமி விரத முறைகள்: வட இந்தியாவில் ராம நவமி அன்று சிறுமிகளை (கன்னியா) வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு உணவு படைத்து, பரிசுகள் வழங்கி வழிபடும் வழக்கம் உள்ளது. இந்நாளில் வால்மீகி ராமாயணம் அல்லது கம்பராமாயணத்தில் உள்ள 'ராம அவதார'ப் பகுதியை வாசிப்பது கோடி புண்ணியம் தரும்.விரதம் இருப்பவர்கள் வெங்காயம், பூண்டு தவிர்த்த 'சாத்வீக' உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். நீர் ஆகாரம் மற்றும் பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது மனத்தூய்மையை அளிக்கும்.

Follow Us