தங்கம், வெள்ளி ETFகளில் முதலீடு செய்துள்ளீர்களா?.. செபியின் இந்த அறிவிப்பை பாருங்க! | TV9 Tamil News

தங்கம், வெள்ளி ETFகளில் முதலீடு செய்துள்ளீர்களா?.. செபியின் இந்த அறிவிப்பை பாருங்க!

Published: 

15 Feb 2026 12:39 PM

 IST

Gold And Silver ETF Investment | சமீப காலமாக பொதுமக்கள் மத்தியில் தங்கம் மற்றும் வெள்ளி ஈடிஎஃப் முதலீடு அதிகமாக உள்ளது. இந்த நிலையில், தங்க மற்றும் வெள்ளி ஈடிஎஃப் தொடர்பான முக்கிய அறிவிப்பை செபி வெளியிட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5தங்க ஆபரணங்களில் முதலீடு செய்வதை போலவே பலரும் தங்கம் மற்றும் வெள்ளி ஈடிஎஃப்களில் முதலீடு செய்கின்றனர். ஈடிஎஃப்கள் பாதுகாப்பான லாபத்தை வழங்கும் என்பதால் பலரும் அதனை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி ஈடிஎஃப்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பை செபி வெளியிட்டுள்ளது. 

தங்க ஆபரணங்களில் முதலீடு செய்வதை போலவே பலரும் தங்கம் மற்றும் வெள்ளி ஈடிஎஃப்களில் முதலீடு செய்கின்றனர். ஈடிஎஃப்கள் பாதுகாப்பான லாபத்தை வழங்கும் என்பதால் பலரும் அதனை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி ஈடிஎஃப்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பை செபி வெளியிட்டுள்ளது. 

2 / 5

இந்திய பங்குச் சந்தையின் ஒழுங்குமுறை ஆணையமான செபி, எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்கள் விலை அடிப்படை மற்றும் விலை வரம்பு கணக்கீட்டில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம். 

3 / 5

தற்போது ஈடிஎஃப் விலை அடிப்படை T-2 NAV அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதாவது இரண்டு நாட்களுக்கு முன்பு பதிவான வர்த்தகத்தின் நிகர சொத்து மதிப்பு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதன் காரணமாக விலை நிர்ணயத்தில் இரண்டு நாட்கள் தாமதம் ஏற்படுகிறது. 

4 / 5

தினசரி சந்தை மாறும்போது இரண்டு நாள் பழைய தரவு பயன்படுத்துவது விலைக்கு பொருந்தாது. இதேபோல போனஸ், டிவிடெண்ட், ஸ்பிளின் உள்ளிட்ட கார்ப்பரேட் நடவடிக்கைகள் சாரியாக பிரதிபலிக்காமல் போகலாம் என செபி வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் கூறியுள்ளது. 

5 / 5

இந்த நிலையில், T-2 NAV-க்கு பதிலாக T-1 நாள் அதாவது முந்தைய வர்த்தக நாள் தரவை பயன்படுத்த வேண்டும் என செபி கூறியுள்ளது. இதற்கான மூன்று தேர்வுகளை செபி தனது அறிக்கையில் கூறியுள்ளது. அது தொடர்பான கருத்துக்களை பொதுமக்கள் மார்ச் 6 வரை செபிக்கு அனுப்பலாம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.