Pallavaram Constituency Election 2026: குடிநீர் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல்.. பல்லாவரம் தொகுதியில் நிரந்தர தீர்வு வழங்கப்போவது யார்? | TV9 Tamil News

Pallavaram Constituency Election 2026: குடிநீர் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல்.. பல்லாவரம் தொகுதியில் நிரந்தர தீர்வு வழங்கப்போவது யார்?

Published: 

11 Mar 2026 23:04 PM

 IST

பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியை எடுத்துக் கொண்டால், பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல், பொழிச்சலூர், ஹஸ்தினாபுரம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்குகின்றன. பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி சென்னை மாநகரப் பகுதியை ஒட்டியுள்ள முக்கியமான நகர்ப்புற சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

1 / 6பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியை எடுத்துக் கொண்டால், பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல், பொழிச்சலூர், ஹஸ்தினாபுரம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்குகின்றன.

பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியை எடுத்துக் கொண்டால், பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல், பொழிச்சலூர், ஹஸ்தினாபுரம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்குகின்றன.

2 / 6

பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி சென்னை மாநகரப் பகுதியை ஒட்டியுள்ள முக்கியமான நகர்ப்புற சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது சென்னை நகர வளர்ச்சியுடன் விரைவாக வளர்ந்துள்ள பகுதியாகவும், வர்த்தகம், குடியிருப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் அதிகம் உள்ள தொகுதியாகவும் கருதப்படுகிறது.

3 / 6

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் கருணாநிதி கிட்டத்தட்ட 1,26,427 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் 88,646 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் கருணாநிதி கிட்டத்தட்ட 36,781 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. பல்லாவரம் தொகுதியை பொறுத்தவரையில் திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் திமுகவைச் சேர்ந்த கருணாநிதி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவிற்கு சாதகமான தொகுதியாக இது பார்க்கப்படுகிறது.

4 / 6

இந்த தொகுதியின் முக்கிய பிரச்சினைகளாக போக்குவரத்து நெரிசல், குடிநீர் தட்டுப்பாடு, வடிகால் வசதி, குடியிருப்பு வளர்ச்சி உள்ளிட்டவை காணப்படுகின்றன. குறிப்பாக கோடை காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக ஏற்படுகிறது.

5 / 6

எனவே இதற்கு நிரந்தரத் தீர்வு வழங்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே சமயத்தில், இப்பகுதியில் சென்னை விமான நிலையம் அருகில் இருப்பதன் காரணமாகவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

6 / 6

எனவே இத்தகைய அடிப்படை வசதிகளுக்கு தகுந்த நடவடிக்கைகளும் நிரந்தரத் தீர்வும் வழங்க வேண்டும் என மக்கள் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

Follow Us