Mylapore Constituency Election 2026: சென்னையின் பழமையான குடியிருப்பு பகுதி.. மைலாப்பூர் தொகுதியில் யார் கை ஓங்கி இருக்கு? திமுக vs அதிமுக.. | TV9 Tamil News

Mylapore Constituency Election 2026: சென்னையின் பழமையான குடியிருப்பு பகுதி.. மைலாப்பூர் தொகுதியில் யார் கை ஓங்கி இருக்கு? திமுக vs அதிமுக..

Published: 

07 Mar 2026 22:41 PM

 IST

மைலாப்பூர் சட்டமன்ற தொகுதி (Mylapore Assembly Constituency) என்பது தமிழ்நாட்டின் முக்கியமான நகர்ப்புற தொகுதிகளில் ஒன்றாகும். இது சென்னை மாநகரின் மையப் பகுதிகளில் அமைந்துள்ளது. வரலாறு, மத பாரம்பரியம், கல்வி நிறுவனங்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் காரணமாக மைலாப்பூர் பகுதி தமிழக அரசியலிலும் முக்கிய இடம் பெற்றுள்ளது.

1 / 6மைலாப்பூர் சட்டமன்ற தொகுதி (Mylapore Assembly Constituency) என்பது தமிழ்நாட்டின் முக்கியமான நகர்ப்புற தொகுதிகளில் ஒன்றாகும். இது சென்னை மாநகரின் மையப் பகுதிகளில் அமைந்துள்ளது. வரலாறு, மத பாரம்பரியம், கல்வி நிறுவனங்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் காரணமாக மைலாப்பூர் பகுதி தமிழக அரசியலிலும் முக்கிய இடம் பெற்றுள்ளது.

மைலாப்பூர் சட்டமன்ற தொகுதி (Mylapore Assembly Constituency) என்பது தமிழ்நாட்டின் முக்கியமான நகர்ப்புற தொகுதிகளில் ஒன்றாகும். இது சென்னை மாநகரின் மையப் பகுதிகளில் அமைந்துள்ளது. வரலாறு, மத பாரம்பரியம், கல்வி நிறுவனங்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் காரணமாக மைலாப்பூர் பகுதி தமிழக அரசியலிலும் முக்கிய இடம் பெற்றுள்ளது.

2 / 6

மைலாப்பூர் சட்டமன்ற தொகுதி, சென்னை மாநகரில் உள்ள சென்னை தெற்கு மக்களவை தொகுதிக்கு உட்பட்டதாகும். நகர்ப்புற நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வர்க்க மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதியாக இது பார்க்கப்படுகிறது.

3 / 6

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில், கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் தா. வேலு வெற்றி பெற்றார்.திமுக வேட்பாளர் வேலு கிட்டத்தட்ட 68,392 வாக்குகள் பெற்றிருந்தார். இரண்டாவது இடத்தில் இருந்த அதிமுக வேட்பாளர் நடராஜ் 55,759 வாக்குகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

4 / 6

மைலாப்பூர் தொகுதியில் பொதுவாக மழைக்காலத்தில் நீர் தேக்கம், போக்குவரத்து நெரிசல், பழைய குடியிருப்பு பகுதிகளில் சாலை மற்றும் கழிவுநீர் வசதி, கடற்கரை அருகே வெள்ளப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளிட்ட பிரச்சனைகள் மக்கள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது.

5 / 6

மைலாப்பூர் பகுதி சென்னை நகரின் மிகப் பழமையான குடியிருப்பு பகுதிகளில் ஒன்று.இந்த தொகுதி பல ஆண்டுகளாக முக்கிய அரசியல் கட்சிகளுக்கிடையே போட்டி நிலவிய தொகுதியாக உள்ளது. குறிப்பாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன.

6 / 6

1977ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலிருந்து அதிமுக இந்தத் தொகுதியில் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் திமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. எனவே, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us