மகா சிவராத்திரி.. சிவபெருமானின் அருள் கிடைக்கப்போகும் 5 ராசிகள்.. | TV9 Tamil News

மகா சிவராத்திரி.. சிவபெருமானின் அருள் கிடைக்கப்போகும் 5 ராசிகள்..

Updated On: 

15 Feb 2026 14:46 PM

 IST

Maha Shivaratri 2026: மகா சிவராத்திரி என்பது சிவபெருமானின் அருள் பூமிக்கு முழுமையாக கிடைக்கும் ஒரு அரிய நாள். இந்த நாளில் இரவு முழுவதும் விழித்திருந்து சிவனை தியானித்து வழிபட்டால், பாவங்கள் நீங்கி, சிவகடாட்சம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், இந்த நாளில் நவகிரகங்களின் அதிர்வுகள் மனித வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

1 / 52026ஆம் ஆண்டில் நடைபெறும் மகா சிவராத்திரி மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது.  இந்த மகா சிவராத்திரி நாளில், நவகிரகங்களில் ஏற்படும் முக்கியமான மாற்றங்களின் காரணமாக, சில ராசிக்காரர்களுக்கு சிவபெருமானின் அருள் அதிகமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சனி, குரு, செவ்வாய் மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்களின் இயக்கங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் சக்தி கொண்டதாக இருக்கின்றன. இந்த கிரக மாற்றங்களின் பலனாக, ஐந்து முக்கியமான ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம், செழிப்பு மற்றும் ஆனந்தம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டில் நடைபெறும் மகா சிவராத்திரி மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. இந்த மகா சிவராத்திரி நாளில், நவகிரகங்களில் ஏற்படும் முக்கியமான மாற்றங்களின் காரணமாக, சில ராசிக்காரர்களுக்கு சிவபெருமானின் அருள் அதிகமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சனி, குரு, செவ்வாய் மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்களின் இயக்கங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் சக்தி கொண்டதாக இருக்கின்றன. இந்த கிரக மாற்றங்களின் பலனாக, ஐந்து முக்கியமான ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம், செழிப்பு மற்றும் ஆனந்தம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2 / 5

சிவபெருமான் கருணைக் கடல் என்பதால், அனைத்து ராசிக்காரர்களுக்கும் அவரின் அருள் கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. மகா சிவராத்திரி என்பது சிவபெருமானின் அருள் பூமிக்கு முழுமையாக கிடைக்கும் ஒரு அரிய நாள். இந்த நாளில் இரவு முழுவதும் விழித்திருந்து சிவனை தியானித்து வழிபட்டால், பாவங்கள் நீங்கி, சிவகடாட்சம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், இந்த நாளில் நவகிரகங்களின் அதிர்வுகள் மனித வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

3 / 5

கும்ப ராசி: கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மகா சிவராத்திரி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதுவரை இருந்த துன்பங்கள் நீங்கி, வாழ்க்கையில் நன்மைகள் அதிகரிக்கும். சொந்த வீடு, வாகனம், திருமணம், குழந்தைபாக்கியம் போன்ற யோகங்கள் ஏற்படும். மீன ராசி: மீன ராசிக்காரர்களுக்கு பண பிரச்சினைகள் நீங்கி, செல்வம் அதிகரிக்கும். வாழ்க்கையில் நிலைத்தன்மை மற்றும் செழிப்பு கிடைக்கும். சிவாலய தரிசனம் மற்றும் தானம் இவர்களுக்கு அதிக பலன் தரும்.

4 / 5

மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் மற்றும் முன்னேற்றம் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கி, முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இந்த காலம் இவர்களுக்கு பொற்காலமாக அமையும். ரிஷப ராசி: ரிஷப ராசிக்காரர்களுக்கு கடன் பிரச்சினைகள் குறைந்து, வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

5 / 5

கன்னி ராசி: கன்னி ராசிக்காரர்களுக்கு திருமண யோகம், குழந்தைபாக்கியம் போன்ற நல்ல பலன்கள் கிடைக்கும். சொந்த வீடு, வாழ்க்கை முன்னேற்றம் போன்ற வாய்ப்புகள் உருவாகும். இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலன் கிடைக்கும் என்றாலும், மற்ற அனைத்து ராசிக்காரர்களுக்கும் சிவபெருமானின் அருள் கிடைக்கும். பக்தியுடன் சிவனை வழிபட்டால், யாரும் நல்ல பலன்களை பெற முடியும். மகா சிவராத்திரி என்பது வாழ்க்கையை மாற்றக்கூடிய ஆன்மீக சக்தி நிறைந்த நாள்.இந்த நாளில் சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டு, தான தர்மங்கள் செய்தால், வாழ்க்கையில் அமைதி, செழிப்பு மற்றும் முன்னேற்றம் உறுதியாக கிடைக்கும்.