T20 World Cup 2026: 2026 டி20 உலகக் கோப்பையில் களமிறங்கும் 20 அணிகள்.. இதில் இத்தனை இந்திய கேப்டன்களா..? | TV9 Tamil News

T20 World Cup 2026: 2026 டி20 உலகக் கோப்பையில் களமிறங்கும் 20 அணிகள்.. இதில் இத்தனை இந்திய கேப்டன்களா..?

Published: 

05 Feb 2026 22:22 PM

 IST

T20 World Cup Captains: வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் 2026 டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை போன்று, 2026 டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள் பங்கேற்கும் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பங்கேற்கும் 20 அணிகளும் தங்களது டி20 உலகக் கோப்பைக்கான அணிகளை அறிவித்தனர். இந்த 20 அணிகளில் 3 இந்திய கேப்டன்கள் இடம்பெற்றுள்ளனர்.

1 / 6இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர்கள் தலைமையில் பல இணை அணிகள் இந்த ஆண்டு உலகக் கோப்பையில் பங்கேற்கின்றன. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, 2026 டி20 உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிறது. தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகவும் ஆபத்தான அணியாக இந்தியா உள்ளதால, இந்திய டி20 அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர்கள் தலைமையில் பல இணை அணிகள் இந்த ஆண்டு உலகக் கோப்பையில் பங்கேற்கின்றன. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, 2026 டி20 உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிறது. தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகவும் ஆபத்தான அணியாக இந்தியா உள்ளதால, இந்திய டி20 அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

2 / 6

2026 டி20 உலகக் கோப்பையில் ஓமன் அணியை இந்தியாவின் லூதியானாவில் பிறந்த ஜதிந்தர் சிங் வழிநடத்துகிறார். ஜதிந்தரின் கிரிக்கெட் பயணம் எந்தவொரு பெரிய கிரிக்கெட் அகாடமி அல்லது முறையான பயிற்சியும் இல்லாமல் தொடங்கியது. சிமென்ட் மற்றும் ஆஸ்ட்ரோ-டர்ஃப் விக்கெட்டுகளில் விளையாடுவதன் மூலம் அவர் தனது நுட்பத்தை மேம்படுத்திக் கொண்டார்.

3 / 6

சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியை ரோல் மாடலாக கொண்ட ஜதிந்தர், 2025ல் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, ஓமனை ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையில் விளையாட அழைத்து வந்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓமன் அணிக்காக முன்னணி ரன் அடித்த வீரராகவும் ஜதிந்தர் சிங் உள்ளார்.

4 / 6

பஞ்சாப் மாநிலம் கருடாஸ்பூரைச் சேர்ந்த தில்ப்ரீத் சிங் பஜ்வா, 2026 டி20 உலகக் கோப்பையில் கனடா அணிக்கு தலைமை தாங்குகிறார். 2003 ஆம் ஆண்டு பிறந்த தில்ப்ரீத், பஞ்சாபில் நடந்த 19 வயதுக்குட்பட்டோர் அணியில் 130 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததால், அவரது பெற்றோர் 2020 ஆம் ஆண்டு கனடாவுக்குச் செல்ல முடிவு செய்தனர்.

5 / 6

கனடாவில் தில்ப்ரீத் சிங் பஜ்வா தனது திறமையை நிரூபித்து, குளோபல் டி20 கனடாவில் சதம் அடித்த முதல் கனேடிய வீரர் ஆனார். தற்போது தில்ப்ரீத் சிங் பஜ்வாவுக்கு 23 வயதே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டி20 உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய போட்டியில் கேப்டன் பதவி வகித்தது அவரது திறமைக்கு சான்றாகும்.

6 / 6

குஜராத்தின் ஆனந்தில் பிறந்த மோனாங்க் படேல், 2026 டி20 உலகக் கோப்பையில் அமெரிக்கா அணிக்கு தலைமை தாங்குகிறார். ஜூனியர் கிரிக்கெட்டில் ஜஸ்பிரித் பும்ராவுடன் விளையாடிய மோனாங்க் படேல், இந்தியாவில் வாய்ப்பு கிடைக்காததால் ​​2013 இல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். இன்று, அவர் அமெரிக்க பேட்டிங்கின் முதுகெலும்பாக இருக்கிறார். 2021 இல் கேப்டனாக ஆன பிறகு, 2024 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அணியை வரலாற்று வெற்றிக்கு அழைத்து சென்றுள்ளார்.