IndvsSA : கவலையளிக்கும் இந்தியாவின் டாப் ஆர்டர் – தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமா? | TV9 Tamil News

IndvsSA : கவலையளிக்கும் இந்தியாவின் டாப் ஆர்டர் – தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமா?

Updated On: 

22 Feb 2026 14:21 PM

 IST

T20 World Cup 2026 : டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்திய அணி, சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் வலுவான தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த நிலையில் மோசமான இந்தியாவின் டாப் ஆர்டரால் ரசிகர்களிடையே கவலை அதிகரித்துள்ளது.

1 / 52026 உலகக்கோப்பை தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்திய அணி, சூப்பர் 8 சுற்றில் வலுவான தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பிப்ரவரி 22, 2026 அன்று மாலை 7 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

2026 உலகக்கோப்பை தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்திய அணி, சூப்பர் 8 சுற்றில் வலுவான தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பிப்ரவரி 22, 2026 அன்று மாலை 7 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

2 / 5

கடந்த 2024 டி20 உலகக்கோப்பை ஃபைனில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த நிலையில் அந்த தோல்விக்கு பழிவாங்கும் நோக்கத்துடன் தென்னாப்பிரிக்கா இந்த போட்டியை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

3 / 5

குரூப் சுற்றில் அமெரிக்கா, பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. அதே போல தென்னாப்பிரிக்காவும் அனைத்து போட்டிகளிலும் வென்று இந்தியாவை பழி தீர்க்க தயாராகி வருகிறது. இதனால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 / 5

இந்த நிலையில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் அணி நிர்வாகத்தினரிடையே மிகப்பெரும் கவலையை அளித்துள்ளது. தொடக்க வீரர் அபிஷேக் சர்மா தொடர்ந்து 3 போட்டிகளில் டக் அவுட் ஆனது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் திலக் வர்மாவின் ஸ்டிரைக் ரேட் குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூட எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. இதனால் இந்திய அணி நடுப்பகுதியில் களமிறங்கும் வீரர்களை அதிகம் நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

5 / 5

இந்த தொடரில் இந்தியாவுக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருபவர் இஷான் கிஷன். அவரின் அதிரடி பேட்டிங் இந்திய அணிக்கு பெரிய பலமாக உள்ளது. தென்னாப்பிரிக்காவை சமாளிக்க அவர் மட்டும் போதாது. தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து தாக்குதலை எதிர்கொள்ள டாப் ஆர்டர் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகியுள்ளது.