T20 World Cup 2026: சஞ்சு சாம்சன் மட்டுமே! தொடர் ஆட்ட நாயகன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியீடு! | TV9 Tamil News

T20 World Cup 2026: சஞ்சு சாம்சன் மட்டுமே! தொடர் ஆட்ட நாயகன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியீடு!

Published: 

06 Mar 2026 21:57 PM

 IST

Player of the Tournament Nominees: நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டிக்கு கிரிக்கெட் உலகம் தயாராகி வரும் நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தொடர் ஆட்ட நாயகன் விருதுக்கான இறுதிப் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில், அறிவிக்கப்பட்ட 8 வீரர்கள் பட்டியலில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

1 / 6இந்திய அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடிய  4 இன்னிங்ஸ்களில் 201.73 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டில் 232 ரன்கள் குவித்தார். இது மட்டுமின்றி, சூப்பர் 8 மற்றும் அரையிறுதி அடுத்தடுத்த 2 ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்திய அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடிய 4 இன்னிங்ஸ்களில் 201.73 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டில் 232 ரன்கள் குவித்தார். இது மட்டுமின்றி, சூப்பர் 8 மற்றும் அரையிறுதி அடுத்தடுத்த 2 ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

2 / 6

2026 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியை சேர்ந்த வில் ஜாக்ஸ் 4 ஆட்ட நாயகன் விருதுகளைப் பெற்றுள்ளார். இதுவரை 226 ரன்களை பேட்டிங்கிலும், 5 விக்கெட்டுகளை பந்துவீச்சில் எடுத்துள்ளார். இதில், இலங்கைக்கு எதிரான சிறப்பாக பந்துவீசி 3/22 என்ற சிறந்த எகானமியையும் கொண்டுள்ளார்.

3 / 6

383 ரன்களுடன் போட்டியின் முன்னணி ரன் அடித்த வீரரான ஃபர்ஹான், ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் ஒரே பதிப்பில் இரண்டு சதங்களைப் பதிவு செய்த முதல் வீரர் என்ற வரலாற்றைப் படைத்தார்.

4 / 6

நியூசிலாந்து அணியின் பேட்டிங்கில் நங்கூரமாக திகழும் ரச்சின் ரவீந்திரா, பந்துவீச்சில் இலங்கைக்கு எதிராக 4/27 என்ற சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். நியூசிலாந்து அணியின் மற்றொரு வீரரான சைஃபர்ட் 8 போட்டிகளில் 4 அரைசதங்களுடன் 274 ரன்கள் குவித்துள்ளார். நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு இவரும் முக்கிய காரணம்.

5 / 6

2026 டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணிக்காக கேப்டன் மார்க்ரம் சிறப்பாக செயல்பட்டார். சூப்பர் 8ல் நியூசிலாந்திற்கு எதிராக 86 ரன்கள் எடுத்தது உட்பட, ஆட்டமிழக்காமல் 3 அரைசதங்களை பதிவு செய்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்காக லுங்கி நிகிடி டி20 உலகக் கோப்பையில் 10 ப்ளஸ் விக்கெட்டுகளை பதிவு செய்தார்.

6 / 6

அமெரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஷாட்லி வான் ஷால்க்விக் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அச்சுறுத்தலை கொடுத்தார். அமெரிக்காவின் வரலாற்று சிறப்புமிக்க டி20 உலகக் கோப்பை பயணத்திற்கு ஷாட்லி வான் ஷால்க்விக் முக்கிய காரணம்.

Follow Us
Related Stories
தமிழகத்திற்கு 4 புதிய ரயில்கள் சேவைகள் – எங்கு தெரியுமா? ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு
Janhvi Kapoor: எனது ஃபேஸ் க்ளோவிங்-காக இதை மறக்காமல் செய்வேன்.. ஜான்வி கபூர் சொன்ன பியூட்டி சீக்ரட்!
IND vs ENG Semi Final: அரையிறுதியில் மீண்டும் ஒரு அசால்ட்.. சொற்ப ரன்களில் அபிஷேக் அவுட்!
Anaswara Rajan: நான் அந்த நடிகரின் மிகப்பெரிய ரசிகை.. எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது – அனஸ்வரா ராஜன்!
IndvsEng: சஞ்சு சாம்சன் vs ஜோஃப்ரா ஆர்ச்சர் – போட்டியின் முடிவை தீர்மானிக்கப்போவது யார்?
கொளுத்தும் வெயிலுக்கு குளிர்ச்சியான சுற்றுலா தலம்… தென்தமிழகத்தின் சொர்க்கம்… பரபரப்பான வாழ்வில் இருந்து இளைப்பாற இங்க போங்க!