தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தாண்டும்.. முக்கிய நபர் சொன்ன ஷாக் தகவல்! | TV9 Tamil News

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தாண்டும்.. முக்கிய நபர் சொன்ன ஷாக் தகவல்!

Updated On: 

20 Apr 2026 20:47 PM

 IST

Gold Price Will Reach 2 Lakh Rupees In 2027 | தங்கம் விலை மிக கடுமையான உச்சத்தில் விற்பனை செய்யப்படும் நிலையில், 2027 அட்சய திருதியைக்கு தங்கம் ரூ.2 லட்சத்தை தாண்டு என்று வென்சுரா செக்யூரிட்டி தலைவர் தெரிவித்துள்ளார்.

1 / 5உலக அளவில் தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம்  ரூ.14,300-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படும் நிலையில், அது சாமானியர்களின் எட்டா கனியாக மாறியுள்ளது.

உலக அளவில் தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம்  ரூ.14,300-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படும் நிலையில், அது சாமானியர்களின் எட்டா கனியாக மாறியுள்ளது.

2 / 5

தங்கம் விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்வை சந்தித்துள்ள நிலையில், இனி தங்களால் தங்கம் வாங்க முடியாதா என சாமானிய மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில், பொதுமக்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்கம் விலை குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

3 / 5

அதாவது, தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்கும் என்று அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வென்சுரா செக்யூரிட்டி நிறுவனத்தின் தலைவர் என்.ராமசாமி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமன்றி, 2026 டிசம்பர் மாதத்திற்கு தங்கம் சுமார் 15 சதவீதம் விலை உயர்வை அடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

4 / 5

Gold Price (10)

5 / 5

குறிப்பாக டிசம்பர் மாதத்திற்குள் 24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.1.75 லட்சமாக உயரும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே நிலவி வரும் நிலையற்ற தன்மை, புவிசார் பதற்றங்கள் காரணமாக தங்கம் விலை கடும் உச்சத்தில் உள்ள நிலையில், அவரின் இந்த கணிப்பு சாமானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Follow Us