EPFO : 2025-ல் பென்ஷன் குறித்து புதிய விதிகளை அறிமுகம் செய்த இபிஎஃப்ஓ! | TV9 Tamil News

EPFO : 2025-ல் பென்ஷன் குறித்து புதிய விதிகளை அறிமுகம் செய்த இபிஎஃப்ஓ!

Updated On: 

15 Dec 2025 21:51 PM

 IST

EPFO New Rules On Employee Pension Scheme | 2025 ஆம் ஆண்டுக்கான பென்ஷன் விதிகளில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் சில முக்கிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது. அவற்றில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5ஊழியர்களின் வசதிக்கு ஏற்ப ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான ஊழியர் ஓய்வூதிய திட்டத்தில் இபிஎஃப்ஓ சில முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

ஊழியர்களின் வசதிக்கு ஏற்ப ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான ஊழியர் ஓய்வூதிய திட்டத்தில் இபிஎஃப்ஓ சில முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

2 / 5

அதிக பென்ஷன் : ஓய்வு பெற்ற ஊழியர்கள் அதிக அளவு மாத ஓய்வூதியம் பெரும் வகையில், இபிஎஃப்ஓ முக்கிய மாற்றத்தை மேற்கொண்டு வருகிறது. அதாவது, ஊழியர்கள் தங்களது பணி காலத்தின்போது ஊதியம் பெற்று வந்ததை போலவே ஓய்வுக்கு பிறகும் மாதம் ரூ.7,500 முதல் ரூ.15,000 வரை பென்ஷன் வாங்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

3 / 5

முன்கூட்டியே பென்ஷன் பணத்தை எடுப்பது : முன்கூட்டியே பென்ஷன் பணத்தை எடுப்பதற்கான விதிகளை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் மாற்றி அமைத்துள்ளது. அதாவது, ஊழியர்கள் தங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட தொகையை 100 சதவீதம் எடுத்துக்கொள்ளலாம் என்றும், 25 சதவீதம் ஊழியர்களின் வங்கி கணக்கில் அவர்களது பாதுகாப்புக்காக இருப்பு வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

4 / 5

டிஜிட்டல் கிளெய்ம்கள் : பென்ஷன் தொடர்பான சேவைகளை முற்றிலும் ஆன்லைன் மூலம் வழங்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது பென்ஷன் சேவைகளை முழுவதுமாக ஆன்லைனில், பேப்பர் வேலைகள் இல்லாமல், விரைவால செயலாற்றுவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது.

5 / 5

ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும் : ஊழியர்களின் நலனுக்கான ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மிக சுலபமாகவும், விரைவாகவும் சேவைகளை பெற வழிவகை செய்துள்ளது. எனவே ஊழியர்கள் தங்களது விவரங்கள் மற்றும் தரவுககளை இபிஎஃப்ஓவில் அப்டேட் செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது.