Durai Murugan Tamil Nadu Election: காட்பாடி தொகுதியில் தொடர் வெற்றிக்கு சொந்தக்காரர்.. மீண்டும் வெற்றியை தனதாக்கி கொள்வாரா துரைமுருகன்! | TV9 Tamil News

Durai Murugan Tamil Nadu Election: காட்பாடி தொகுதியில் தொடர் வெற்றிக்கு சொந்தக்காரர்.. மீண்டும் வெற்றியை தனதாக்கி கொள்வாரா துரைமுருகன்!

Published: 

13 Mar 2026 19:37 PM

 IST

Tamil Nadu Elections 2026 : திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடிமட்ட தொண்டனாக இணைந்து பல்வேறு துறைகளின் அமைச்சர் பொறுப்பை வகித்தவரும்,வகித்து வருபவருமான துரைமுருகன் வரும் தேர்தலில் காட்பாடி தொகுதியில் மீண்டும் தனது 7- ஆவது முறை வெற்றியை பதிவு செய்வாரா.

1 / 5திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர்களில்  ஒருவராகவும்,  நீர்வளத்துறை  அமைச்சராகவும் இருந்து வருபவர்  துரைமுருகன்.  இவர்  கடந்த 1938 ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி  துரைசாமி-  தவசி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.  சட்டப்படிப்பு மற்றும்  எம்ஏ படித்துள்ள இவர், சி. என். அண்ணாதுரை பேச்சு மற்றும் அரசியல் ஆகியவற்றால ஈர்க்கப்பட்டதுடன், அரசியல் ஆர்வம் காரணமாக தனது 16- ஆவது வயதில் திமுகவில் அடிமட்ட தொண்டனாக இணைந்தார்.  எம்ஜிஆர் உடன்  நெருக்கமாக இருந்தாலும் திமுகவிலேயே தொடர்ந்து வந்தார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர்களில் ஒருவராகவும், நீர்வளத்துறை அமைச்சராகவும் இருந்து வருபவர் துரைமுருகன். இவர் கடந்த 1938 ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி துரைசாமி- தவசி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். சட்டப்படிப்பு மற்றும் எம்ஏ படித்துள்ள இவர், சி. என். அண்ணாதுரை பேச்சு மற்றும் அரசியல் ஆகியவற்றால ஈர்க்கப்பட்டதுடன், அரசியல் ஆர்வம் காரணமாக தனது 16- ஆவது வயதில் திமுகவில் அடிமட்ட தொண்டனாக இணைந்தார். எம்ஜிஆர் உடன் நெருக்கமாக இருந்தாலும் திமுகவிலேயே தொடர்ந்து வந்தார்.

2 / 5

கட்சியில் படிப்படியாக வளர்ந்து கடந்த 1971 ஆம் ஆண்டு ராணிப்பேட்டை தொகுதியில் களமிறங்கிய துரைமுருகன் தனது முதல் வெற்றியை பதிவு செய்து எம்எல்ஏவாக தேர்வானார். இதைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை, காட்பாடி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு அதிலும் வெற்றியை பதிவு செய்து 10 முறை எம்எல்ஏ பதவியை தக்க வைத்துக் கொண்டார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரானார். கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் வெற்றியை தனதாக்கி கொண்ட துரைமுருகனுக்கு பொதுப் பணித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

3 / 5

இதேபோல, பொதுப் பணித் துறை, சட்டத்துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைச்சராகவும் இருந்து வந்தார். கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் களமிறங்கிய துரைமுருகன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நிறுவன காங்கிரஸ் வேட்பாளர் தண்டாயுதபாணியை வீழ்த்தி 57.79 சதவீத வாக்குகள் பெற்று முதல் முறையாக எம்எல்ஏவானார். பின்னர், 1977 தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் மாறி போட்டியிட்ட துரைமுருகன் சுயேச்சை வேட்பாளர் வஹாப்பை வீழ்த்தி 43.53 வாக்குகள் பெற்று 2- ஆவது வெற்றியை பதிவு செய்தார்.

4 / 5

1980 தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் களம் இறங்கிய துரைமுருகன் அதிமுக வேட்பாளர் ரேணுவை வீழ்த்தி 53.70 வாக்கு சதவீதம் பெற்று 3- ஆவது முறையாக வெற்றி பெற்றார். தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்ற துரைமுருகன் 1984 தேர்தலில் காட்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜி ரகுபதியிடம் 39.62 வாக்கு சதவீதம் பெற்று தோல்வியை தழுவினார். பின்னர் 1989 தேர்தலில் காட்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் மார்க்க பந்துவை வீழ்த்து 43.41 வாக்கு சதவீதம் பெற்று வெற்றியை தனதாக்கி கொண்டார்.

5 / 5

1991 தேர்தலில் அதிமுக வேட்பாளர் கலைச்செல்வியிடம் மீண்டும் துரைமுருகன் தோல்வியே தழுவினார். இதை தொடர்ந்து, 1996 முதல் கடந்த 2021 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் துறைமுருகன் தொடர்ச்சியான வெற்றியை பதிவு செய்து வந்தார். கடந்த 2021 தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி ராமுவை 45. 71 வாக்கு சதவீத வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தார். இதேபோல, வருகிற சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் துரைமுருகன் மீண்டும் களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது. வழக்கம் போல இதே தொகுதியில் தனது வெற்றி கொடியை நாட்டுவார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Follow Us