Coimbatore South Constituency Election 2026: முக்கிய நகர்புற தொகுதிகளில் ஒன்றான கோவை தெற்கு.. மக்களின் வாக்கு யாருக்கு? | TV9 Tamil News

Coimbatore South Constituency Election 2026: முக்கிய நகர்புற தொகுதிகளில் ஒன்றான கோவை தெற்கு.. மக்களின் வாக்கு யாருக்கு?

Published: 

06 Apr 2026 18:49 PM

 IST

கோவை மாவட்டத்தில் அமைந்திருக்கக்கூடிய முக்கிய சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாக கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி பார்க்கப்படுகிறது. இது 2008 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பொது தொகுதியாகும். இது கோவை மக்களவை தொகுதியில் அடங்கியுள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது முழுக்க முழுக்க நகர்ப்புற தொகுதியாகும்.

1 / 6கோவை மாவட்டத்தில் அமைந்திருக்கக்கூடிய முக்கிய சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாக கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி பார்க்கப்படுகிறது. இது 2008 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பொது தொகுதியாகும். இது கோவை மக்களவை தொகுதியில் அடங்கியுள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது முழுக்க முழுக்க நகர்ப்புற தொகுதியாகும்.

கோவை மாவட்டத்தில் அமைந்திருக்கக்கூடிய முக்கிய சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாக கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி பார்க்கப்படுகிறது. இது 2008 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பொது தொகுதியாகும். இது கோவை மக்களவை தொகுதியில் அடங்கியுள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது முழுக்க முழுக்க நகர்ப்புற தொகுதியாகும்.

2 / 6

கோவை நகரின் முக்கிய வணிக மற்றும் குடியிருப்பு பகுதிகளை உள்ளடக்கிய இந்த தொகுதி, ரேஸ்கோர்ஸ், ஒப்பனக்கார வீதி, பிக் பஜார், தாமு நகர் உள்ளிட்ட பகுதிகளை கொண்டதாகும். இந்த சட்டமன்றத் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 லட்சம் ஆகும்.

3 / 6

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வானதி சீனிவாசன் 53,029 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர் கமல் ஹாசன் 51,481 வாக்குகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் தேசிய காங்கிரஸ், நான்காவது இடத்தில் நாம் தமிழர் கட்சி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டமன்றத் தொகுதியை எடுத்துக் கொண்டால், அதிமுக வலிமையாக இருக்கிறது. இந்த தொகுதி அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

4 / 6

கோவை தெற்கு தொகுதி நகரின் முக்கிய வணிக மற்றும் அரசியல் மையமாக பார்க்கப்படுகிறது. இந்த சட்டமன்றத் தொகுதியில் மக்கள் முன்வைக்கும் முக்கிய பிரச்சனைகள் அலுவலக நேரங்களில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் போதிய வாகன நிறுத்துமிடம் இல்லாமை ஆகும்.

5 / 6

அதே சமயத்தில், கோடை காலங்களில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. குப்பை சேகரிப்பு சீராக இல்லாததும் மக்கள் தரப்பில் குறிப்பிடப்படுகிறது. திட்டமிடப்படாத கட்டிட வளர்ச்சி, பழைய மற்றும் புதிய கட்டிடங்களின் கலப்பு ஆகியவை நகர திட்டமிடலில் பெரிய சவாலாக உள்ளன. மொத்தத்தில், கோவை தெற்கு தொகுதியின் முக்கிய பிரச்சனை என்பது அதிகமான நகர வளர்ச்சி மற்றும் குறைவான கட்டமைப்பு வசதிகள் என்பதே ஆகும்.

6 / 6

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் திமுக தரப்பில் செந்தில் பாலாஜி, அதிமுக தரப்பில் அம்மன் அர்ஜுனன், தமிழக வெற்றி கழகம் தரப்பில் செந்தில்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி தரப்பில் பேரறிவாளன் உள்ளிட்டோர் களமிறக்கப்படுகின்றனர். இந்த தொகுதி அதிமுகவின் கோட்டையாக இருந்தாலும், வரவிருக்கும் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால் திமுக தரப்பில் செந்தில் பாலாஜி போட்டியிடும் சூழலில், வெற்றி வாய்ப்பில் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us