சித்ரா பௌர்ணமி 2026.. வீட்டிலேயே செய்ய வேண்டிய எளிய மற்றும் சக்திவாய்ந்த வழிபாடு!! | TV9 Tamil News

சித்ரா பௌர்ணமி 2026.. வீட்டிலேயே செய்ய வேண்டிய எளிய மற்றும் சக்திவாய்ந்த வழிபாடு!!

Updated On: 

26 Apr 2026 14:32 PM

 IST

Chitra Pournami 2026: பெண் தெய்வத்திற்கு குங்கும அர்ச்சனையும், ஆண் தெய்வத்திற்குச் சந்தன அர்ச்சனையும் செய்ய வேண்டும். ஒரு காகிதத்தில் 108 முறை "ஓம் [குலதெய்வம் பெயர்] நமஹ" என்று எழுதி அர்ச்சனை செய்வது அபரிமிதமான பலனைத் தரும். குழந்தைகளை அர்ச்சனை செய்யச் சொல்வது குலதெய்வத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்.

1 / 5சித்ரா பௌர்ணமி என்பது அனைத்து தெய்வங்களுக்கும், குறிப்பாகக் குலதெய்வத்திற்கும் மிக உகந்த நாளாகக் கருதப்படுகிறது. 2026-ஆம் ஆண்டு மே மாதம் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சித்ரா பௌர்ணமி, புத்த பூர்ணிமா மற்றும் அமிர்த யோகம் ஆகிய மூன்றும் இணைந்து வருவது மிகவும் விசேஷமானது. இந்த நன்னாளில் குலதெய்வத்தை முறையாக வழிபட்டால் தீராத கடன்களும் தீரும், தடைபட்ட சுபகாரியங்களும் கைகூடும்.

சித்ரா பௌர்ணமி என்பது அனைத்து தெய்வங்களுக்கும், குறிப்பாகக் குலதெய்வத்திற்கும் மிக உகந்த நாளாகக் கருதப்படுகிறது. 2026-ஆம் ஆண்டு மே மாதம் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சித்ரா பௌர்ணமி, புத்த பூர்ணிமா மற்றும் அமிர்த யோகம் ஆகிய மூன்றும் இணைந்து வருவது மிகவும் விசேஷமானது. இந்த நன்னாளில் குலதெய்வத்தை முறையாக வழிபட்டால் தீராத கடன்களும் தீரும், தடைபட்ட சுபகாரியங்களும் கைகூடும்.

2 / 5

வழிபாட்டிற்கு உகந்த நேரம்: மாலை நேரம்: சந்திரனின் முழு ஒளியுடன் கூடிய மாலை நேரத்தில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு. காலை நேரம்: மாலையில் கோவிலுக்குச் செல்பவர்கள் காலையிலேயே வீட்டில் வழிபடலாம். காலை 6:00 - 7:00 மணி வரை அல்லது 9:30 - 10:30 (சுக்கிர ஹோரை) மணி வரை வழிபட உகந்த நேரமாகும்.

3 / 5

வழிபாட்டு முறைகள்: தலைவாசலின் இருபுறமும் விளக்கேற்ற வேண்டும், நெய்வேத்தியம்: * பால் சார்ந்த இனிப்புகள் (பால் பொங்கல், பால்கோவா, பால் கொழுக்கட்டை) கட்டாயம் இருக்க வேண்டும். சர்க்கரை பொங்கல் மற்றும் செந்நிறப் பழங்கள் (செவ்வாழை, மாதுளை அல்லது ஆப்பிள்) வைப்பது கடன்களைக் குறைக்க உதவும். பெண் தெய்வமாக இருந்தால் பானகம் செய்து வைப்பது மிகவும் விசேஷமானது. பெண்கள் மலர் சூடி, மனமகிழ்ச்சியுடன் வழிபாட்டில் அமர வேண்டும்.

4 / 5

பெண் தெய்வத்திற்கு குங்கும அர்ச்சனையும், ஆண் தெய்வத்திற்குச் சந்தன அர்ச்சனையும் செய்ய வேண்டும். ஒரு காகிதத்தில் 108 முறை "ஓம் [குலதெய்வம் பெயர்] நமஹ" என்று எழுதி அர்ச்சனை செய்வது அபரிமிதமான பலனைத் தரும். குழந்தைகளை அர்ச்சனை செய்யச் சொல்வது குலதெய்வத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாள் வேண்டுதல்கள் (திருமணம், சொந்த வீடு போன்றவை) நிறைவேற, 5 ரூபாய் நாணயம் அல்லது 11, 51 என காணிக்கையை ஒரு துணியில் முடிந்து குலதெய்வத்தின் காலடியில் வைத்து வேண்டிக் கொள்ள வேண்டும்.

5 / 5

பூஜை முடிந்ததும் நெய்வேத்தியத்தை வீட்டில் உள்ள அனைவரும் பிரசாதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்குக் குங்குமம் மற்றும் பூக்கள் கொடுப்பது நன்மையைத் தரும். குலதெய்வத்தின் அருள் இருந்தால் மற்ற அனைத்து தெய்வங்களின் ஆசியும் தானாகவே கிடைக்கும். இந்தச் சித்ரா பௌர்ணமியில் உங்கள் குலதெய்வத்தை மனதார வணங்கி வாழ்வில் சகல வளங்களையும் பெறுங்கள்.

Follow Us