Chepauk Constituency Election 2026: திமுக கோட்டையாக இருக்கும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி.. இந்த முறையும் சாதகமாக இருக்குமா? | TV9 Tamil News

Chepauk Constituency Election 2026: திமுக கோட்டையாக இருக்கும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி.. இந்த முறையும் சாதகமாக இருக்குமா?

Published: 

02 Mar 2026 20:54 PM

 IST

சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி என்பது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தொகுதி ஆகும். சென்னையில் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதி திமுகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளரான உதயநிதி ஸ்டாலின், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் கசாலியை கிட்டத்தட்ட 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் அபாரமாக தோற்கடித்தார்.

1 / 6சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி என்பது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தொகுதி ஆகும். சென்னையில் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதி திமுகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது.

சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி என்பது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தொகுதி ஆகும். சென்னையில் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதி திமுகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது.

2 / 6

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளரான உதயநிதி ஸ்டாலின், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் கசாலியை கிட்டத்தட்ட 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் அபாரமாக தோற்கடித்தார்.

3 / 6

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தொகுதி என்பதனால், இந்த தொகுதிக்கு பல்வேறு முக்கியத்துவங்கள் அளிக்கப்படுகின்றன. சேப்பாக்கம் தொகுதியைப் பொறுத்தவரையில், 1996 ஆம் ஆண்டு முதல் திமுகவின் கோட்டையாக விளங்கி வருகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இந்த தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

4 / 6

அதனைத் தொடர்ந்து 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அன்பழகன் திமுக தரப்பில் போட்டியிட்டார். பின்னர் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் கிட்டத்தட்ட 93,285 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.

5 / 6

சமீபத்தில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியில் மட்டும் 89,241 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

6 / 6

சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதி அதிக மக்கள் தொகையும், நகர்ப்புற மேம்பாட்டு பிரச்சினைகளும் கொண்ட ஒரு முக்கிய தொகுதியாகக் கருதப்படுகிறது. தொடர்ந்து பல ஆண்டுகளாக திமுக தனது வெற்றி கொடியை நாட்டி வரும் நிலையில், வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலும் இந்த தொகுதி திமுகவிற்கு சாதகமாக அமையும் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும், இந்த முறையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Follow Us