Teeth Care: எது சாப்பிட்டாலும் பல் கூச்சமா..? வீட்டிலேயே சரிசெய்யும் எளிய குறிப்புகள்..!

Teeth Sensitive Relief: சூடாக அல்லது ஜில்லென்று சாப்பிடும்போதோ, குடிக்கம்போதோ கூச்ச உணர்வு, சாப்பிடும்போது திடீரென குத்துதல் போன்ற உணர்வுகளை தருவதால் அன்றாட வழக்கங்களை பாதிக்கின்றன. இந்தநிலையில், வீட்டில் கிடைக்கும் சமையலறை பொருட்களை பயன்படுத்தி எளிதாக எப்படி வீட்டிலேயே பல் கூச்சத்தை சரி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம். 

Teeth Care: எது சாப்பிட்டாலும் பல் கூச்சமா..? வீட்டிலேயே சரிசெய்யும் எளிய குறிப்புகள்..!

பல் கூச்சம்

Published: 

16 Jan 2026 16:58 PM

 IST

பல் கூச்சம் (Sensitive Teeth) என்பது கண்ணுக்கு தெரியாமல் இருந்தாலும் தொடர்ந்து குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தும் பிரச்சனைகளில் ஒன்றாகும். மருத்துவ ரீதியாக பல் கூச்சம் பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இது பெரும்பாலும் பற்களின் மேல் அடுக்கில் உள்ள எனாமல் தேய்மானத்தால் ஏற்படுகிறது. ஈறுகள் வலுவிழக்கும்போது, ​​பற்களுக்கு அடியில் உள்ள டென்டின் வெளிப்படும். சூடாக அல்லது ஜில்லென்று சாப்பிடும்போதோ, குடிக்கம்போதோ கூச்ச உணர்வு, சாப்பிடும்போது திடீரென குத்துதல் போன்ற உணர்வுகளை தருவதால் அன்றாட வழக்கங்களை பாதிக்கின்றன. இந்தநிலையில், வீட்டில் கிடைக்கும் சமையலறை பொருட்களை பயன்படுத்தி எளிதாக எப்படி வீட்டிலேயே பல் கூச்சத்தை சரி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: வாய் வழியாக சுவாசிப்பதை எப்படி நிறுத்துவது..? மருத்துவர் ஜனனி ஜெயபால் அட்வைஸ்!

கடுகு எண்ணெய்:

கடுகு எண்ணெயில் சிறிது உப்பு கலந்து பல் துலக்குவது பல் வலியைக் குறைக்கிறது. ஈறுகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.

கிராம்பு எண்ணெய்:

கிராம்பு எண்ணெயை பஞ்சு பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பல்லில் தடவலாம். கிராம்பு வலி நிவாரணி பண்புகளைக் கொண்டுள்ளதால், இது வலியைக் குறைக்க பெரிதும் உதவி செய்யும். கிராம்பில் உள்ள யூஜெனால், பல்லில் உள்ள நரம்புகளை லேசாக மரத்துப்போக செய்வதன்மூலம் வலியின் தீவிரத்தை குறைக்கிறது. மேலும், யூஜெனால் பாக்டீரியா வளர்ச்சியை தடுத்து, தொற்று பரவுவதை குறைக்கிறது. இதனால் படிப்படியாக வலியும் குறைய தொடங்கும்.

உப்பு கலந்த நீர்:

உப்பு கலந்த நீர் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்ல பலனை தரும். சூடான நீரில் உப்பு கலந்து பயன்படுத்துவது பற்கள் மற்றும் ஈறுகளில் உள்ள நுண்ணுயிரிகளின் மீது ஆஸ்மோடிக் அழுத்தத்தை உருவாக்கி, அவற்றை நீரிழப்பு செய்து பலவீனப்படுத்துகிறது. இது ஈறு மேற்பரப்பில் உள்ள அழுக்கு மற்றும் பிளேக்கை தளர்த்தி எரிச்சலை குறைக்கிறது. இவ்வாறு வாய் கொப்பளிப்பது ஈறு திசுக்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் குணப்படுத்துவதை துரிதப்படுத்துகிறது.

மஞ்சள்:

மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சளின் பயன்பாடு பல்வலியைக் குறைக்கவும் உதவுகிறது.

சரியான பல்துலக்கும் பேஸ்ட்:

பற்களின் மேல் அடுக்கு, எனாமல் எனப்படும், தேய்ந்து போகும்போது, ​​பற்கள் உணர்திறன் கொண்டதாக மாறும். மிகவும் கடினமாக பல் துலக்குவதும் இந்தப் பிரச்சினையை ஏற்படுத்தும். உங்கள் பற்கள் உடைந்தாலோ அல்லது விரிசல் அடைந்தாலோ, இது உங்கள் பற்களில் கூச்ச உணர்வையும் ஏற்படுத்தும்.

ALSO READ: இனிப்பு சாப்பிட்டாலே சொத்தை பல் பயமா..? இதை செய்தால் வராது!

பல் கூச்சத்தை தவிர்க்க, உணர்திறன் வாய்ந்த பல் துலக்கும் பேஸ்டை பயன்படுத்தவும். அதிக வலி இருந்தால், பேஸ்ட்டை உங்கள் விரலில் தடவி மெதுவாக பல் துலக்கவும். மென்மையான முட்கள் கொண்ட பல் துலக்கும் பிரஸை பயன்படுத்துவது முக்கியம். அதேநேரத்தில், வெதுவெதுப்பான நீரை கொண்டு வாய் கொப்பளிப்பது நிவாரணம் தரும். பல் கூச்ச உணர்வு கொண்டவர்கள் மிகவும் குளிர்ந்த அல்லது மிகவும் சூடான உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

"சொமேட்டோவில் நடக்கும் மோசடி சம்பவங்களை பகிர்ந்த சிஇஓ".. எச்சரிக்கை மக்களே!!
சீனாவில் அடுத்த சாதனை.. neuromorphic ரோபோட்டிக் eskin எப்படி வேலை செய்யும்?
29 கோடி ரூபாய்க்கு ஏலம் போன மீன்.. ஜப்பானின் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..
ஜப்பானில் முடிக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?