Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Summer Foot Care: கோடை காலத்தில் சாக்ஸ் நாற்றமா..? இந்த 5 குறிப்புகள் சரிசெய்யும்..!

Stop Sweaty Sock Smell: கோடை காலத்தில் அதிகப்படியான வியர்வை காரணமாக சாக்ஸில் இருந்து துர்நாற்றம் வீசுவதைத் தடுக்க, பருத்தி அல்லது கம்பளி சாக்ஸ் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு சாக்ஸை நன்கு துவைத்து, உலர வைக்க வேண்டும். லாவென்டர் அல்லது தேயிலை மர எண்ணெய் சேர்த்து துவைப்பதால் நல்ல மணம் கிடைக்கும். கால்களை சுத்தமாக வைத்திருப்பது மற்றும் டால்கம் பவுடர் பயன்படுத்துவதும் முக்கியம்.

Summer Foot Care: கோடை காலத்தில் சாக்ஸ் நாற்றமா..? இந்த 5 குறிப்புகள் சரிசெய்யும்..!
சாக்ஸ் நாற்றம் வராமல் தடுக்கும் முறைImage Source: Freepik
mukesh-kannan
Mukesh Kannan | Published: 01 May 2025 15:23 PM

குளிர்காலமாக இருந்தாலும் சரி, கோடைக்காலமாக (Summer) இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, சிறு குழந்தைகளாக இருந்தாலும் சரி அனைவரும் சாக்ஸ் அணிகிறார்கள். குழந்தைகளுக்கு கோடைக்கால விடுமுறை என்பதால் சாக்ஸ் அணிய வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், அலுவலகம் செல்லும் நபர்கள் கோடையில் நாள் முழுவதும் சாக்ஸ் (Socks) அணியை வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நீண்ட நேரம் சாக்ஸ் அணிவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சிறிதுநேரம் ஷூவை கழட்டி ரிலாக்ஸ் செய்வது நல்லது. இங்குதான் ஒரு டிவிஸ்ட் உள்ளது. அதாவது, கோடையில் அதிகமாக தலை முதல் கால் வரை வியர்க்கும். இதனால், சாக்ஸ் சில நேரங்களில் ஈரமாகி நாற்றத்தை தரும். இதன் காரணமாக, பொது இடங்களில் ஒரு சிலர் ஷூக்களை கழட்ட சங்கடப்படுகிறார்கள். இந்தநிலையில், கோடையில் சாக்ஸில் இருந்து நாற்றம் வீசமால் இருக்க என்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம்.

கோடையில் சாக்ஸில் இருந்து நாற்றம் வீசாமல் இருப்பது எப்படி..?

  • உங்கள் சாக்ஸ் எப்போதும் ப்ரஸாக இருக்க வேண்டுமென்றால், துவைக்கும்போது சில துளிகள் லாவென்டர் அல்லது தேயிலை மர எண்ணெயை சேர்க்கலாம். இந்த என்ணெய் நல்ல மணத்தை தருவதுடன், அவற்றிக் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உங்கள் கால்களை பாதுகாக்க செய்யும்.
  • சாக்ஸ் வாங்கும்போது உங்கள் பாதத்திற்கு சரியாக பொருந்தும்படியும், பருத்தி அல்லது கம்பளி போன்ற இயற்கை இழைகளால் ஆன சாக்ஸ்களை வாங்குவதும் நல்லது. இவை கோடை காலத்திலும் காற்றை நன்றாக பாய அனுமதித்து வியர்வையை எளிதாக உறிஞ்ச வழிவகை செய்யும்.
  • கோடை காலம் மட்டுமல்ல, எந்த பருவ காலத்திலும் ஒருநாளைக்கு ஒரு முறை பயன்படுத்திய சாக்ஸை மறுமுறை பயன்படுத்தாதீர்கள். அதேநேரத்தில், உங்கள் கால்கள் அதிகமாக வியர்க்கும் பண்புகளை கொண்டிருந்தால், நீங்கள் ஒரு நாளைக்கு தாராளமாக 2 முறை கூட சாக்ஸை பயன்படுத்தலாம். இது உங்கள் கால்களில் பாக்டீரியா பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.
  • சாக்ஸை எப்படி நன்றாக துவைப்பது முக்கியமோ, அதேபோல் அவற்றை நன்றாக காய வைப்பதும் மிக மிக முக்கியம். ஈரமான சாக்ஸ் அணிவது நாற்றம் வீச உதவுவது மட்டுமின்றி, தோல் பிரச்சனைகளையும் உண்டாக்கலாம்.
  • சாக்ஸ் அணிவதற்கு முன் உங்கள் கால்கள் நன்கு கழுவி உலர வைத்தபின் அணிந்து கொள்ளுங்கள். பாதங்களின் சுத்தம் மிகவும் முக்கியம், அதன் பிறகு டால்கம் பவுடர் அல்லது பிற ஏதேனும் பவுடரைப் பயன்படுத்துவதால் வியர்வை உண்டாவது குறைகிறது.
  • கால் வியர்வை துர்நாற்றத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைத்தால், அதற்கு எளிதான தீர்வு வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவது. உங்க சாக்ஸ் மேல கொஞ்சம் வாசனை திரவியத்தை தெளித்து கொள்ளலாம். இது வியர்வை வாசனையை கட்டுப்படுத்தும்.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் நாயகி இவரா?
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் நாயகி இவரா?...
ஏப்ரல் 2025ல் அதிகபட்சமாக ரூ. 2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்!
ஏப்ரல் 2025ல் அதிகபட்சமாக ரூ. 2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்!...
மன அமைதியே முக்கியம்.. Waves மாநாட்டில் அல்லு அர்ஜூன் ஓபன் டாக்!
மன அமைதியே முக்கியம்.. Waves மாநாட்டில் அல்லு அர்ஜூன் ஓபன் டாக்!...
இணையத்தில் கவனம் பெறும் நடிகர் அஜித் குமாரின் பேட்டி
இணையத்தில் கவனம் பெறும் நடிகர் அஜித் குமாரின் பேட்டி...
கமல் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் - ஓபனாக பேசிய சிரஞ்சீவி
கமல் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் - ஓபனாக பேசிய சிரஞ்சீவி...
ஹிட் 3 படத்தின் வெற்றி... நானி வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!
ஹிட் 3 படத்தின் வெற்றி... நானி வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!...
பிளே ஆஃப் கனவுடன் RCB, KKR.. வெற்றி பெற்று ஆப்பு வைக்குமா CSK..?
பிளே ஆஃப் கனவுடன் RCB, KKR.. வெற்றி பெற்று ஆப்பு வைக்குமா CSK..?...
ஒன்று சேரும் 4 கிரகங்கள்.. இந்த 6 ராசிக்கு கிடைக்கும் பலன்கள்!
ஒன்று சேரும் 4 கிரகங்கள்.. இந்த 6 ராசிக்கு கிடைக்கும் பலன்கள்!...
எனக்கு அந்த ரோலில் நடிக்கவேண்டும் என்று ஆசை.. நடிகை ரேவதி!
எனக்கு அந்த ரோலில் நடிக்கவேண்டும் என்று ஆசை.. நடிகை ரேவதி!...
14 வருடங்களுக்கு பிறகு மதுரையில் விஜய்! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
14 வருடங்களுக்கு பிறகு மதுரையில் விஜய்! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு...
கம்பேக் கொடுத்த சூர்யா.. ரெட்ரோ எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
கம்பேக் கொடுத்த சூர்யா.. ரெட்ரோ எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!...