Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

RO Water Waste: RO-வில் இருந்து வெளியேறும் நீரை வேஸ்ட் செய்யாதீங்க..! கோடையில் இப்படி பயன்படுத்துங்க..!

Summer Water Conservation: கோடை காலத்தில் RO நீர் சுத்திகரிப்பான்களால் ஏராளமான நீர் வீணாகிறது. இந்த வீணாகும் RO கழிவுநீரை குடிப்பதற்குப் பயன்படுத்த முடியாவிட்டாலும், வீட்டு வேலைகளில், தோட்டப் பராமரிப்பில் மற்றும் வாகனம் சுத்தம் செய்வதில் பயன்படுத்தலாம். இதன் மூலம் தண்ணீர் சேமிப்பதோடு, பணமும் மிச்சமாகும். RO கழிவுநீர் பயன்பாட்டை மேம்படுத்தும் பல எளிய வழிகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.

RO Water Waste: RO-வில் இருந்து வெளியேறும் நீரை வேஸ்ட் செய்யாதீங்க..! கோடையில் இப்படி பயன்படுத்துங்க..!
RO வேஸ்ட் வாட்டர்Image Source: Freepik
mukesh-kannan
Mukesh Kannan | Published: 30 Apr 2025 14:47 PM

கோடைக்காலம் (Summer) தொடங்கியது முதலே மக்கள் ஒவ்வொரு நாளும் வெயிலில் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். கடும் வெயில் தாக்கத்தால் குடிக்க மக்களுக்கு அதிகபடியான நீர் தேவைப்படுகிறது. இந்த காலத்தில் மக்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறார்களோ, அவ்வளவு நன்மை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், மெட்ரோ வாட்டர்கள், குழாய் தண்ணீர்கள் போன்றவை குடிக்க பாதுகாப்பானதா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்து வருகிறது. இதன் காரணமாக, பெரும்பாலான காலங்களில் இன்று RO வாட்டர்கள் பயன்படுத்துகிறார்கள். RO வாட்டர் ஒவ்வொரு வீடுகளில் பயன்படுத்தும்போது தண்ணீர் சுத்தம் செய்யப்படும் பெரும்பாலான தண்ணீர் வேஸ்ட்டாக (RO Waste Water) சமையலறை சிங்க் வழியாக வெளியேறுகிறது.

கோடைக்காலத்தில் இதுபோன்ற செயல் பெரியளவில் தண்ணீர் பஞ்சத்தை உண்டாக்கும். இந்தநிலையில், RO வாட்டர் மூலம் வெளியேறும் வேஸ்ட்டான தண்ணீரை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். இப்போதெல்லாம் பல வீடுகளில் RO அல்லது ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய நீர் வடிகட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. சராசரியாக, ஒரு தலைகீழ் சவ்வூடுபரவல் நீர் சுத்திகரிப்பான் ஒவ்வொரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருக்கும் சுமார் மூன்று லிட்டர் தண்ணீரை வீணாக்கப்படுகிறது. இதன் காரணமாக, RO சுத்திகரிப்பான் மூலம் உற்பத்தி செய்யப்படும் தண்ணீரில் 75% கழிவு நீர் வெளியேறுகிறது.

குடிக்க ஏற்றதல்ல:

RO மூலம் வெளியேற்றப்படும் கழிவு நீர் எப்போதும் குடிக்க ஏற்றதல்ல. இருப்பினும்,  அதை முழுவதும் வெளியேற்றாமல் பல வழிகளில் பயன்படுத்தலாம். இதன்மூலம், கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ROவில் இருந்து வெளியேற்றப்படும் நீரை முழுமையாக சேமிப்பது கடினம் என்றாலும், இவற்றை குடங்களிலோ, வாளிகளிலோ பயன்படுத்தலாம். இதில் பிடித்து வைக்கப்படும் தண்ணீரை மிகவும் எளிமையாக தரையைத் துடைத்தல், பாத்திரங்களை கழுவுதல், தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல் அல்லது சிங்க் அல்லது குளியலறையில் உள்ள படிந்த அழுக்குகளை சுத்தம் செய்தல் போன்றவற்றிற்கு தாராளமாக பயன்படுத்தலாம்.

அதேபோல், தினமும் உங்கள் காரை தண்ணீர் கொண்டு நீங்கள் சுத்தம் செய்யும் நபராக இருந்தால் RO-விலிருந்து வெளியேறும் இந்த கழிவுநீரை கொண்டு துடைக்கலாம். மேலும், தினமும் குளியலறையை கழுவினால் அல்லது வீட்டைத் துடைத்தால், RO-விலிருந்து வரும் இந்த கழிவுநீரைப் பயன்படுத்தலாம். இது மட்டுமல்லாமல், RO-வில் இருந்து வெளியேறும் தண்ணீரை கொண்டு வீட்டிற்கு வெளியே காலையில் கோலம் போடுவதற்கு முன் வாசல் தெளிக்க பயன்படுத்தலாம். இந்த நீரைக் கொண்டு எந்த அழுக்கு படிந்த இடத்தையும் எளிதாக சுத்தம் செய்ய முடியும். அதேபோல், கோடைக்காலத்தில் வீட்டில் ஏர் கூலர்களை பயன்படுத்துபவர்களாக இருந்தால் RO-விலிருந்து வெளியேறும் நீரை ஊற்றி நீங்கள் குளிர்ச்சியை பெறலாம்.

உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!...
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!...
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்...
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?...
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா...
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!...
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்......
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்...
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!...
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்...