பொய் சொல்பவர்களை இப்படியும் கண்டுபிடிக்கலாம்..!

உளவியலாளர் பால் எக்மேன் மேற்கொண்ட ஆய்வுகளின் படி, நொடிகளில் தோன்றும் நுண்ணிய முகபாவனைகள் ஒருவரின் உண்மையான உணர்ச்சியை வெளிப்படுத்துகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது. மிகையான விளக்கங்களும் இயல்பற்ற நடத்தை மாற்றங்களும் இணைந்து பார்க்கப்படும் போது, ஒருவர் உண்மையா அல்லது பொய்யா பேசுகிறார் என்பது குறித்து தெளிவு உருவாகும் என்று உளவியல் வட்டாரங்களில் குறிப்பிடப்படுகிறது.

பொய் சொல்பவர்களை இப்படியும் கண்டுபிடிக்கலாம்..!

Psychological Signs

Published: 

04 Mar 2026 16:40 PM

 IST

உடல் மொழியில் பதற்றத்தின் வெளிப்பாடு

நாம் பேசுபவர்கள் உண்மையைச் சொல்கிறார்களா அல்லது பொய் சொல்கிறார்களா என்பதைக் கண்டறிவது எளிதான விஷயம் அல்ல என்று உளவியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இருப்பினும், அவர்களின் நடத்தை, வார்த்தைகள் மற்றும் உடல் மொழியில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு சில உண்மைகளை புரிந்துகொள்ள முடியும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. உண்மையை விட பொய் பேசுவதற்கு மூளைக்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதால், அந்த உளவியல் அழுத்தம் உடல் மொழியில் வெளிப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது. 2008ஆம் ஆண்டு வெளியான ஆய்வின் படி, பொய் சொல்பவர்கள் பதிலளிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள் அல்லது மறந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் மிக வேகமாகப் பேசுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் சொன்ன கதையை மாற்றி கேட்கும்போது தடுமாறுவது பொதுவாகக் கவனிக்கப்படுகிறது.

வார்த்தைகளில் மாறுபடும் உண்மை

உளவியலாளர் பெல்லா டெபாலோ தனது 2003ஆம் ஆண்டு ஆய்வில், பொய் பேசுபவர்கள் ஒவ்வொரு முறையும் ஒரே கதையைச் சொல்ல முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். உண்மை பேசுபவர்கள் சிறிய விஷயங்களை மறந்துவிடலாம் என்றாலும், கதையின் மைய கருத்தை மாற்றுவதில்லை. ஆனால் பொய்யர்கள் முக்கிய அம்சங்களை மாற்றி பேசுவார்கள் என்று கூறப்படுகிறது. திடீரென கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர்கள் தெளிவான பதில் வழங்க முடியாமல் தடுமாறுவது அதிகமாகக் காணப்படுகிறது. தேவையற்ற மற்றும் மிகையான விளக்கங்களை வழங்கி, தங்களது கதையை நம்ப வைக்க முயற்சி செய்வதும் ஒரு அறிகுறியாக கருதப்படுகிறது.

Also Read: பிறந்த குழந்தையின் சருமத்தை வெயில் காலத்தில் எப்படி பாதுகாப்பது?

உணர்ச்சி மற்றும் அனுபவ ஆழம்

1981ஆம் ஆண்டு ஜான்சன் மற்றும் ரே அறிமுகப்படுத்திய ‘யதார்த்த கண்காணிப்பு கோட்பாடு’ படி, உண்மையான அனுபவங்களில் உணர்ச்சி, காட்சி, ஒலி மற்றும் வாசனை போன்ற உணர்வுகள் இணைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் பொய்யான கதைகளில் இத்தகைய ஆழமான உணர்ச்சி விவரங்கள் காணப்படுவதில்லை. “நீங்கள் என்ன உணர்ந்தீர்கள்?” போன்ற கேள்விகளுக்கு தெளிவான பதில் வழங்க முடியாமல், “எனக்கு நினைவிருக்கிற வரை” போன்ற சொல்லாக்கங்கள் பயன்படுத்தப்படுவது கவனிக்கப்படுகிறது. இது அந்த அனுபவம் உண்மையில் இல்லாததைக் காட்டும் ஒரு உளவியல் குறியீடாக கருதப்படுகிறது.

முகபாவனை மற்றும் கண் தொடர்பின் முரண்பாடு

உளவியலாளர் பால் எக்மேன் மேற்கொண்ட ஆய்வுகளின் படி, நொடிகளில் தோன்றும் நுண்ணிய முகபாவனைகள் ஒருவரின் உண்மையான உணர்ச்சியை வெளிப்படுத்துகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது. சொல்வதற்கும் முகத்தில் பிரதிபலிக்கும் உணர்ச்சிக்கும் இடையில் முரண்பாடு காணப்படும்போது அது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில், கண் தொடர்பை தவிர்ப்பது மட்டுமல்லாமல், தேவையற்ற அளவில் கண்களை நேராகப் பார்த்து நம்ப வைக்க முயற்சி செய்வதும் ஒரு மாற்றமாகக் குறிப்பிடப்படுகிறது. மிகையான விளக்கங்களும் இயல்பற்ற நடத்தை மாற்றங்களும் இணைந்து பார்க்கப்படும் போது, ஒருவர் உண்மையா அல்லது பொய்யா பேசுகிறார் என்பது குறித்து தெளிவு உருவாகும் என்று உளவியல் வட்டாரங்களில் குறிப்பிடப்படுகிறது.

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ