‘டிவி9 ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியா’.. 5 நாள் நடைபெறும் நிகழ்ச்சியில் இடம்பெறும் முக்கிய அம்சஙள் என்ன?
TV9 Festival Of India: டிவி9 ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியா’ இந்த ஆண்டு குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெறவுள்ளது. பணிமனைகள், விளையாட்டுகள், போட்டிகள், கலைக் காட்சிகள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான சிறப்பு ஈடுபாட்டு பகுதிகள் என விழா முழுவதும் விருந்தினர்களுக்கான அற்புத அனுபவங்கள் காத்திருக்கின்றன.

டெல்லி, செப்டம்பர் 15, 2025: ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்த ‘டிவி9 ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியா’ மீண்டும் நடைபெற உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பெரியதாகவும், பிரகாசமாகவும், சிறப்பாகவும் நடைபெறவிருக்கும் இந்த விழாவின் மூன்றாவது பதிப்பு தி பிரண்ட்ஸ் & ஃபேமிலி ஃபெஸ்ட் ஆகும். டிவி9 நெட்வொர்க் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2, 2025 வரை, புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் இந்த ஐந்து நாள் கலாச்சார மாபெரும் நிகழ்வு நடைபெற உள்ளது.
வரவிருக்கும் ‘TV9 இந்திய விழா’ குறித்து பேசிய டிவி9 நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி கே.விக்ரம் தெரிவித்ததாவது, “முந்தைய இரண்டு ஆண்டுகளின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இம்முறை விழாவை இன்னும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரடி இசைக் கச்சேரிகள், பிரபல DJ-களுடன் தாண்டியா-கர்பா இரவுகள், மாபெரும் துர்கா பூஜை விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன.
Also Read: பயங்கர நிலநடுக்கம்.. பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்த செவிலியர்கள்.. குவியும் பாராட்டு!
அதே நேரத்தில், வாழ்க்கை முறை தொடர்பான கடைகளில் அதிக வகைகள் மற்றும் சர்வதேச நிலையங்களும் இடம்பெறுகின்றன. கலாசாரம், பாரம்பரியம், திருவிழா மற்றும் நவீனத்தன்மை என அனைத்தையும் இணைக்கும் இந்த விழா, உண்மையிலேயே இந்தியாவின் ஆன்மாவை பிரதிபலிக்கிறது. மேலும், இந்தியாவின் எண் 1 செய்தி வலையமைப்பாக விளங்கும் TV9 நெட்வொர்க்கின் பெருமையையும் வெளிப்படுத்துகிறது” என்று அவர் கூறினார்.
விழாவின் சிறப்பம்சங்கள் என்ன?
வரவிருக்கும் ‘டிவி9 ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியா’’வில் பாலிவுட்டின் பிரபலமான இசைக்கலைஞர்கள் சச்சேத்-பரம்பரா மற்றும் ஷான் கச்சேரி நிகழ்த்தவிருக்கின்றனர். இதன்படி, சச்சேத்-பரம்பரா வரும் செப்டம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை மக்களுக்காக லைவ் கான்சர்ட் நடத்த உள்ளனர். அதேபோல், பாடகர் ஷான் அக்டோபர் 1, புதன்கிழமை தனது இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.
பாலிவுட்டின் புதிய இசை அலைக்கு உயிரூட்டும் சக்திவாய்ந்த ஜோடியாகத் திகழும் சச்சேத்-பரம்பரா, தங்கள் ஆற்றல் மிகுந்த மேடை நிகழ்ச்சிகள் மற்றும் உணர்ச்சி பூர்வமான இசைக்கான பெயர் பெற்றவர்கள். சமீபத்தில் வெளியான ‘சையாரா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அகர் சாஸ் மேரே து ஹை ஹம்சஃபர்’ பாடல் தற்போது பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
Also Read: காட்டுக்குள் கேட்ட அழுகுரல்.. உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை.. உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்!
இந்தியாவின் “காந்தக் குரல்” என போற்றப்படும் பாலிவுட் பாடகர் ஷான், இந்த ஆண்டு ‘டிவி9 ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியா’வில் தனது இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். பல தலைமுறைகளாக பாலிவுட் இசைக்குப் உயிர் ஊட்டிய ஷான், தனது இனிமையான குரலும் நிலைத்திருக்கும் மெலடிகளாலும் இசை ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர். சாந்த் சிபாரிஷ், முஸு முஸு ஹஸி, தில் நே தும்கோ, வோ பெஹ்லி பார், ஜப் சே தெரே நய்னா உள்ளிட்ட புகழ்பெற்ற பாடல்களை ரசிகர்களுக்கு பரிசாக அளித்துள்ள ஷான், தனது காலத்தால் அழியாத குரலாலும் மறக்க முடியாத நினைவுகளை மீண்டும் மேடையில் உயிர்ப்பிக்கவிருக்கிறார்.
டிவி9 ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியாவில் இடம்பெறும் மற்ற நிகழ்ச்சிகள்:
‘டிவி9 ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியா’ இந்த ஆண்டு இசை, நடனம், கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வண்ணம் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 29ஆம் தேதி டிஜே சாஹில் குலாத்தி, 30ஆம் தேதி டிஜே டார்க், மேலும் அக்டோபர் 2ஆம் தேதி ஒரு சர்வதேச பிரபல டிஜே ஆகியோர் மேடையை கலக்கவுள்ளனர். மூன்று இரவுகள் பாலிவுட்-கர்பா மற்றும் இ.டி.எம் பீட்ஸ் கலந்த தாண்டியா டான்ஸ் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
மேகா கச்சேரிகளுடன் கூடுதலாக, நாள் முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். பாலிவுட் ஹிட் பாடல்கள், மக்கள் இசையின் ஆற்றல், ஃபியூஷன் இசையின் அழகு, இண்டி பீட்ஸ் ஆகியவை ரசிகர்களுக்கு விருந்து அளிக்கவுள்ளன. இசை ரசிகர்கள், உணவு விரும்பிகள், ஷாப்பிங் ஆர்வலர்கள், கலாச்சார ஆர்வலர்கள் என அனைவருக்கும் ஏற்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நிகழ்ச்சியின் முக்கியத்துவம் வாய்ந்த துர்கா பூஜை:
இந்த ஐந்து நாள் விழாவின் மையக் காட்சியாக, இந்தியாவின் ஆன்மீகச் சிறப்பை எடுத்துக்காட்டும் ‘மகா துர்கா பூஜா’ நடைபெறவுள்ளது. டெல்லியில் இதுவரை இல்லாத உயரமான மற்றும் கலைநயமிக்க முறையில் அலங்கரிக்கப்பட்ட துர்கா பூஜா அமைக்கப்பட்டு, ஆன்மீக சடங்குகள், பக்தி நிறைந்த நிகழ்வுகள், தெய்வீக ஆற்றல் ஆகியவை அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தும் வகையில் அமையவுள்ளன.
‘டிவி9 ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியா’ இந்த ஆண்டு குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெறவுள்ளது. பணிமனைகள் (Workshops), விளையாட்டுகள், போட்டிகள், கலைக் காட்சிகள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான சிறப்பு ஈடுபாட்டு பகுதிகள் என விழா முழுவதும் விருந்தினர்களுக்கான அற்புத அனுபவங்கள் காத்திருக்கின்றன.
விழா விவரங்கள்:
- நாட்கள்: செப்டம்பர் 28 – அக்டோபர் 2, 2025
- இடம்: மேஜர் தியான் சந்த் தேசிய மைதானம், புது தில்லி
- நேரம்: காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை
சிறப்பு நிகழ்ச்சிகள்:
- லைஃப்ஸ்டைல் ஷாப்பிங் எக்ஸ்போ & மகா துர்கா பூஜா: செப்டம்பர் 28 – அக்டோபர் 2
- சச்சேத் – பரம்பரா நேரலை இசை நிகழ்ச்சி: செப்டம்பர் 28 | இரவு 7 மணி முதல்
- ஷான் நேரலை இசை நிகழ்ச்சி: அக்டோபர் 1 | இரவு 7 மணி முதல்
- தாண்டியா நைட்ஸ்: செப்டம்பர் 29 (டிஜே சாஹில் குலாத்தி), செப்டம்பர் 30 (டிஜே டார்க்), அக்டோபர் 2 (சர்வதேச டிஜே)
சிறப்பு சலுகை:
- லைஃப்ஸ்டைல் எக்ஸ்போவிற்கு இலவச நுழைவு – தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை.
- கச்சேரி மற்றும் தாண்டியா நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் தற்போது BookMyShow-ல் கிடைக்கின்றன.