Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மும்பை 7/11 ரயில் குண்டுவெடிப்பு.. 12 பேரையும் விடுதலை செய்து மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

Mumbai Train Blast Case: 2006 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த 7/11 ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள், "குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது” என குறிப்பிட்டுள்ளனர்.

மும்பை 7/11 ரயில் குண்டுவெடிப்பு.. 12 பேரையும் விடுதலை செய்து மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 21 Jul 2025 11:30 AM

மும்பை உயர்நீதிமன்றம், ஜூலை 21, 2025: 2006 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த 7/11 ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்துள்ளது. சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதித்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்ததுள்ளது. நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் நீதிபதி ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய அமர்வு, “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது” என குறிப்பிட்டுள்ளனர்.

அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது – மும்பை உயர்நீதிமன்றம்:


மேலும், “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் செய்தார் என்பதை நம்புவது கடினம். எனவே அவர்களின் தண்டனை ரத்து செய்யப்பட்டு ரத்து செய்யப்படுகிறது” என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதோடு, குற்றவாளிகளில் ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையையும், மீதமுள்ள ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையையும் உறுதி செய்ய மறுப்பதாக பெஞ்ச் கூறியதுடன், அவர்களை விடுவித்தது.

பார் அண்ட் பெஞ்சின் கூற்றுப்படி , கிட்டத்தட்ட அனைத்து அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களும் நம்பகத்தன்மையற்றவை என்று நீதிமன்றம் கண்டறிந்தது. குண்டுவெடிப்பு நடந்து கிட்டத்தட்ட 100 நாட்களுக்குப் பிறகும் டாக்சி ஓட்டுநர்கள் அல்லது உள்ளே இருந்தவர்கள் குற்றம் சாட்டப்பட்டவரை நினைவில் வைத்துக் கொள்ள எந்த காரணமும் இல்லை என்று நீதிமன்றம் கூறியதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: இன்று கூடும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. தாக்கல் செய்யப்படும் முக்கிய மசோதாக்கள் என்ன?

இன்று (ஜூலை 21, 2025) உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பிறகு, மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் இருந்து காணொளி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளிகள், தங்கள் வழக்கறிஞர்களுக்கு நன்றி தெரிவித்தனர். ஜூலை 11, 2006 அன்று, மும்பை மேற்குப் பாதையில் பல்வேறு இடங்களில் ஏழு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன, இதில் 180க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.