கனிமொழிக்கு புதிய பொறுப்பு கொடுத்த பிரதமர்.. ரஷ்யா விரையும் திமுக எம்பி.. என்ன மேட்டர்?

ALL party delegation on Operation sindoor : ஆபேரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க 7 பேர் கொண்ட எம்.பிக்கள் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமை தாங்குகிறார். மேலும், தமிழகத்தில் இருந்து இந்த குழுவுக்கு தேர்வான ஒரே பிரதிநிதியாக திமுக எம்.பி கனிமொழி உள்ளார்.

கனிமொழிக்கு புதிய பொறுப்பு கொடுத்த பிரதமர்.. ரஷ்யா விரையும் திமுக எம்பி.. என்ன மேட்டர்?

பிரதமர் மோடி - கனிமொழி எம்பி

Updated On: 

17 May 2025 12:09 PM

டெல்லி, மே 17 : ஆபேரேஷன் சிந்தூர் (Operation sindoor) குறித்தும், பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு (India Pakistan Conflict) ஆதரவு தெரிவித்து வருவது குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துறை மத்திய அரசு 7 பேர் கொண்ட எம்.பிக்கள் குழுவை  அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமை தாங்குகிறார். அதாடு தமிழகத்தில் இருந்து இந்த குழுவுக்கு தேர்வான ஒரே பிரதிநிதியாக திமுக எம்.பி கனிமொழி உள்ளார். தென் இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நபர்களில் கனிமொழியும் ஒருவர். இவர் ரஷ்யா செல்ல இருக்கிறார். அங்கு சென்று ரஷ்யா அரசிடம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளிக்க உள்ளார். 2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இந்திய உட்பட உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கனிமொழிக்கு புதிய பொறுப்பு கொடுத்த பிரதமர்

இந்த விஷயத்தில் இந்தியா கடும் கோபத்திற்கு ஆளானது. இந்த தாக்குதலில் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றும் இருந்தது. ஆனால், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் இந்தியா கூறியது. எனவே, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க நடவடிக்கையை தீவிரப்படுத்தியது.

அதன்படி, ஆபரேஷன் சிந்தூர் என்பதை கையில் எடுத்து பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தியது. இதற்கு பாகிஸ்தானும் தாக்குதல் நடத்திய நிலையில், அது இரு நாடுகளுக்கு இடையே அறிவிக்கப்படாத போராக மாறியது. மூன்று நாட்கள் நடந்த தாக்குதல், 2025 மே 10ஆம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இருப்பினும், பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கையை இந்தியா நிறுத்தவில்லை. பதற்றம் தணிந்தாலும், பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிப்பதாக இந்தியா தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. எனவே, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதையும், ஆபேரஷ் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.

என்ன மேட்டர்?

அதற்காக 7 எம்.பிக்கள் கொண்ட குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது. அந்த குழுவில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த குழுவுக்கு திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமை தாங்குகிறார். அதோடு, மகாராஷ்டிராவின் சிவசேனா கட்சியின் எம்பி ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, தமிழகத்தின் திமுக எம்.பி கனிமொழி, பீகார் பாஜக எம்.பி ரவிசங்கர் பிரசாத், பைஜயந்த் பாண்டா, பீகார் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி சஞ்சய் குமார் ஜா, மகாராஷ்ரா தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரிய சுலே ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த 7 எம்.பிக்களும் உலக நாடுகளுக்கு தங்களது பயணத்தை 2025 மே 22, 23ஆம் தேதிகளில் தொடங்கும் என கூறப்படுகிறது. அதன்படி, சசி தரூர் அமெரிக்காவுக்கும், விஜயந்த் ஜெய் பாண்டா கிழக்கு ஐரோப்பாவுக்கும், கனிமொழிக்கு ரஷ்யாவுக்கும், சஞ்சய் ஜா தென்கிழக்கு ஆசியாவுக்கும், ரவிசங்கர் பிரசாந்த் மத்திய கிழக்கு நாடுகளுக்கும், சுப்ரியா சுலே மேற்கு ஆசியாவுக்கும், ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. இந்த குழுவில் எதிர்க்கட்சி எம்.பி மூன்று பேர் உள்ளனர். இதில் தமிழக பிரதிநிதியாக  கனிமொழி தேர்வு செய்யப்பட்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.