சிவ தாண்டவம்’ இசை ஒலிக்க நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் விளக்க கூட்டம் – வைரலாகும் வீடியோ

Shiv Tandav marks Operation Sindoor briefing : ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்திய ராணுவ படைகள் ஒன்றாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இந்த நிகழ்ச்சி தொடங்கும் முன் சிவ தாண்டவம் எனும் பாடல் ஒலிபரப்பப்பட்டது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சிவ தாண்டவம் இசை ஒலிக்க நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் விளக்க கூட்டம் - வைரலாகும் வீடியோ

Shiv Tandav Marks Operation Sindoor Briefing

Published: 

12 May 2025 16:49 PM

இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் நிலுவையில் உள்ள நிலையில் இரு நாடுகளுக்கு இடையே மெல்ல அமைதி திரும்பி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே போர்  பதற்றம் காரணமாக வட இந்தியாவில் 34 விமான நிலையங்களை (Airport) மூட அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் திறக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இது மீண்டும் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்திய ராணுவ படைகள் ஒன்றாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இந்த நிகழ்ச்சி தொடங்கும் முன் சிவ தாண்டவம் எனும் சமஸ்கிருத பாடல் ஒலிபரப்பப்பட்டது. இது செய்தியாளர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சிவ தாண்டவம் பாடல்

 

சிவ தாண்டவம் பாடல் என்பது பழமையான சமஸ்கிருத பாடல் ஆகும். இது சிவன் அதீத கோபத்திலும் தாண்டவ நடனமாடும் முறையை விவரிக்கிறது. இந்த பாடல்  ராவணன் எழுதியதாக கூறப்படுகிறது. இந்த பாடல் சிவனின் படைக்கும் சக்தியையும் அழிக்கும் சக்தியையும் விளக்குவாதக கூறப்படுகிறது.  செய்தியாளர் சந்திப்பில் டிஜிஎம்ஓ (Director General of Military Operations) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் உரையாற்றத் தயாராகும் போது,  சிவ தாண்டவம் என்ற பாடலின் இசை ஒரு நிமிடம் ஒலித்தது. அதில், கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதல் முதல் கடந்த  2025 ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வரை, இந்தியா  எவ்வாறு பதிலளித்தது என்பதை பத்திரிகையாளர்களுக்கு காண்பிக்கப்பட்ட வீடியோவின் மூலம் விளக்கப்பட்டது.

வீடியோவில் இடம்பெற்ற காட்சிகள்

ஒவ்வொரு முறை நமது மண்ணில் பயங்கரவாதம் தலைதூக்கும் போது, ​​இந்தியா வலிமையாக போராட தயாராகிறது. வெறும் பலத்தை மட்டும்  வைத்து மட்டும் போராடாமல் அசைக்க முடியாத மன உறுதியுடனும் இந்தியா பதிலளிக்கிறது என்று அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. யூரி தாக்குதலுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் சம்பவம், புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட பாலாகோட் விமானத் தாக்குதல் ஆகியவற்றை எடுத்துரைக்கும் வலிமைமிக்க காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

26/11 தாக்குதல், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் போன்ற காட்சிகளுடன் பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் கடுமையான விலையைக் கொடுக்கும் எனும் வார்த்தைகள் வீடியோவின் முடிவில் இடம்பெற்றன. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் மூன்று பாதுகாப்பு படைகள் இணைந்து நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நிகழ்வுகளை விளக்கும் நிகழ்ச்சியின் துவக்கமாக சிவ தாண்டும் இசை பொறுத்தமாக இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.  இதன்மூலம், எதிரிகளை எச்சரிக்கும் வகையில், இந்தியாவின் நிலைப்பாட்டும், பதிலளிக்கும் வலிமையும் தெளிவாக முன்வைக்கப்பட்டது.