டிஜிட்டல் கைது என மிரட்டல்.. முதியவரிடம் இருந்து ரூ.2.07 கோடி கொள்ளையடித்த கும்பல்!

Old Man Lost 2.7 Crores | இந்தியாவில் டிஜிட்டல் கைது மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், மங்களூரில் முதியவர் ஒருவர் டிஜிட்டல் கைது மோசடியில் சிக்கி ரூ.2.7 கோடி பணத்தை இழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

டிஜிட்டல் கைது என மிரட்டல்.. முதியவரிடம் இருந்து ரூ.2.07 கோடி கொள்ளையடித்த கும்பல்!

மாதிரி புகைப்படம்

Published: 

26 Apr 2026 23:28 PM

 IST

பெங்களூரு, ஏப்ரல் 26 : தொழில்நுட்பம் வளர்ச்சி அடைவது மனிதர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைத்தால், தொழில்நுட்ப வளர்ச்சியில் எவ்வளவு சாதகங்கள் உள்ளனவோ அதே அளவு சிக்கல்களும் உள்ளன. அத்தகைய சிக்கல்களில் ஒன்றுதான் ஆன்லைன் மோசடி. இந்தியாவில் நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். இந்த நிலையில், மங்களூரில் (Mangaluru) முதியர்வர் ஒருவர் டிஜிட்டல் கைது மோசடியில் (Digital Arrest Scam) ரூ.2.07 கோடி பணத்தை இழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் கைது மோசடி – ரூ.2.07 கோடியை இழந்த முதியவர்

மார்ச் 31, 2026 அன்று மங்களூருவை சேர்ந்த முதியவர் ஒருவரை தொலைபேசி மூலம் மோசடிக்காரர்கள் தொடர்புக்கொண்டு பேசியுள்ளனர். அவர்கள், நாங்கள் தேசிய தரவுகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து பேசுகிறோம். உங்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி மும்பையில் போலி சிம் கார்டு வாங்கப்பட்டுள்ளது. அது போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : லஸ்ஸியில் மயக்க மருந்து கலந்து முதியவர் கொலை.. நகை, பணத்தை கொள்ளையடித்த பெண்!

அவர்கள் கூறியதை கேட்டு பயந்துப்போன அந்த முதியவர், தனக்கும் அந்த விவகாரத்தும் எந்த வித தொடர்பும் இல்லை என கூறியுள்ளார். ஆனால், அதற்கு மோசடிக்காரர்கள் உங்கள் மீது மும்பை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளனர். அதுமட்டுமன்றி இந்த வழக்கை என்.ஐ.ஏ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்றும் கூறியுள்ளனர்.

கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க பணம் அனுப்ப மிரட்டிய கும்பல்

அந்த கும்பல் தொடர் மிரட்டல்களை விடுத்ததன் காரணமாக முதியவர் கடும் அச்சத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளனர். இதன் காரணமாக முதியவர் மார்ச் 07, 2026 முதல் மார்ச் 18, 2026 வரை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மொத்தமாக ரூ.2.07 கோடி பணத்தை அனுப்பியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டது குறித்து அறிந்த அவர், சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : கேதார்நாத்தில் ரூ.80 – 100 வரை விற்பனை செய்யப்படும் தண்ணீர்.. வியாபாரி விளக்கம்!

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?