மே தின விடுமுறை.. இன்று இங்கெல்லாம் போகாதீங்க.. முழு லிஸ்ட் இதோ!
May 1 Labour Day 2025 : 2025 மே 1ஆம் தேதியான அன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. உழைப்பாளர் தினத்தையொட்டி, நாடு முழுவதும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் பல்வேறு சேவைகள் இன்று இருக்காது. அது என்னென்ன என்பதை பார்ப்போம்.

டெல்லி, மே 1: மே தினத்தையொட்டி (Labour Day 2025), நாட்டில் பல்வேறு சேவைகள் 2025 மே 1ஆம் தேதியான இன்று இயங்காது. அது என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம். உலகம் முழுவதும் 2025 மே 1ஆம் தேதியான இன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. உழைக்கு வர்க்கத்தினரை போற்றும் வகையில், ஆண்டுதோறும் மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் 1923ஆம் ஆண்டு முதல் மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மே தின விடுமுறை
அந்த வகையில், இன்று 2025 மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய நாளில் நாடு முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்து மூடப்பட்டிருக்கும். இது தவிர என்னென்ன மூடப்பட்டிருக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
மே 1ஆம் தேதியான இன்று வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். இதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கோவா, அசாம், மணிப்பூர், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், டிஜிட்டல் சேவை மற்றும் யுபிஐ சேவை தொடந்து செயல்படும். மேலும், மும்பை பங்குச் சந்தை மூடப்பட்டிருக்கும். அரசு விடுமுறை பங்குச்சந்தைகள் மூடப்பட்டிருப்பது வழக்கம். அந்த வகையில், மே தினமான இன்று மூடப்பட்டிருக்கிறது.
இன்று இங்கெல்லாம் போகாதீங்க
இந்தியா முழுவதும் பல பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கும். மேலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மதுக் கடைகள் மூடப்பட்டிருக்கும். அதே நேரத்தில், மருத்துவமனைகள், அவசர சேவைகள் மற்றும் பொது போக்குவரத்து வழக்கம் போல் செயல்படுகிறது.
இதில் முக்கியமாக இன்று வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதை வாடிக்கையாளர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், 2025 மே 2ஆம் தேதியான நாளை வழக்கம்போல் வங்கிகள், மதுக்கடைகள் உள்ளிட்டவை செயல்படும். மே மாதத்தில் மட்டும் வங்கிகள் 13 நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உலகம் முழுவதும் தொழிலாளர் இன்று 8 மணி நேரம் வேலைக்கு பின்னால் கடுமையான போராட்டங்களும், உயர்த்தியாகங்களும் உள்ளன. 8 மணி நேரம் உரிமைக்காக போராடியதற்கு உருவானதே மே தினம். 18ஆம் நூற்றாண்டு வரை உலகின் அனைத்து நாடுகளிலும் தொழிலாளர்கள் 12 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டிய சூழல் இருந்தது. இதனால், பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் வெடித்தன. இந்த போரட்டத்தில் பலரும் உயிரிழந்தும் உள்ளன. பல கட்ட போராட்டங்களுக்கு பிறகே 8 மணி நேரம் வேலை அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.