பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி!
India Pakistan Conflict : இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை 2025 மே 23ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்து ஆறு நாட்களுக்கு பிறகு மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

டெல்லி, மே 01: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்தியா வான்வெளி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்ரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தாலும், இதில் முக்கிய பாகிஸ்தானுக்கு முக்கிய பங்கு இருப்பதாக மத்திய அரசு குற்றச்சாட்டி வருகிறது.
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை
இதனால், பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகை எடுத்து வருகிறது. சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் விசா ரத்து, வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், தூதரக பாதுகாப்பு வாபஸ் போன்ற அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது.
அதோடு இல்லாமல், பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இப்படியான சூழலில், பாகிஸ்தானுக்கு எதிராக மேலும் ஒரு நடவடிக்கையை இந்தியா எடுத்துள்ளது.
அதாவது, இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் நடந்த ஆறு நாட்களுக்கு பிறகு இந்திய நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் கடந்த வாரமே நடவடிக்கை எடுத்தது.
மத்திய அரசு அதிரடி
#BREAKING: From April 30 to May 23, 2025, India has restricted its airspace (VIDF, VABF, VECF, VOMF FIRs) for all aircraft registered in Pakistan or operated, owned, or leased by Pakistani airlines, including military flights. The restriction applies from ground level to… pic.twitter.com/5Kj1l7ldHa
— IANS (@ians_india) April 30, 2025
பாகிஸ்தான் இந்தியா விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடிய நிலையில், தற்போது, இந்தியாவும் அதற்கு பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து NOTAM அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாகிஸ்தான் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் மற்றும் பாகிஸ்தான் விமான நிறுவனங்களால் இயக்கப்படும் அல்லது குத்தகைக்கு விடப்பட்ட விமானங்களுக்கு இந்திய வான்வெளி பறக்க தடை விதிக்கப்படுகிறது. இவற்றில் ராணுவ விமானங்களும் அடங்கும். ” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
2025 ஏப்ரல் 30 முதல் மே 23 வரை பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உடனா வர்த்தகத்தை இந்தியா நிறுத்தியதால், பல்வேறு சிக்கல்களை பாகிஸ்தான் சந்தித்து வரும் நிலையில், தற்போது விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாக பெரும் தலைவலியாக இருக்கும்.
இந்தியா வான்வெளியை மூடியதால், சீனா அல்லது இலங்கையின் வான்வெளியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இது பாகிஸ்தானுக்கு கூடுதல் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும். இதனால், பாகிஸ்தான் விமான நிறுவனத்திற்கு எரிபொருள் செலவை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அதோடு, பயண நேரத்தையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே நிதி பிரச்னை சந்தித்து வரும் பாகிஸ்தானுக்கும், இது மேலும் சுமையை ஏற்படுத்தும்.