Duologue NXT: டிவி9 நிர்வாக இயக்குநர் பருன் தாஸுடன் சனா சஜன் உரையாடல்
டிவி9 நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநர் பருண் தாஸ் டுயோலாக் நெக்ஸ்ட் என்ற பெயரில் வாழ்க்கையில் சவால்களைக் கடந்து வெற்றி பெற்ற பெண்களுடன் உரையாடல் நிகழ்த்தி வருகிறார். அந்த வகையில் அவர் தனது புதிய எபிசோடில் டான்யூப் குழுமத்தின் டைரக்டரும், உலகளாவிய தொழில்முனைவோருமான சனா சஜனுடன் உரையாடினார்.

பருன் தாஸ் - சனா சஜன்
டிவி9 நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பாருண் தாஸ், டான்யூப் குழுமத்தின் டைரக்டரும், உலகளாவிய தொழில்முனைவோருமான சனா சஜனுடன் இணைந்து டுயோலாக் நெக்ஸ்ட் (Duologue NXT) நிகழ்ச்சியின் புதிய எபிசோடில் உரையாடினார். இந்த உரையாடல் வேறும் கேள்வி, பதிலாக இல்லாமல் வாழ்க்கையின் நோக்கம், தன்னம்பிக்கை, லட்சியம் ஆகிய அம்சங்களை ஆழமாகப் பிரதிபலித்தது. சனா சஜன் தனது வாழ்க்கைப் பயணம், எதிர்கொண்ட சவால்கள், தோல்விகளை எவ்வாறு வாய்ப்பாக மாற்றிக்கொண்டார் என்பதை மக்களுடன் பகிர்ந்து கொண்டார்.
உரையாடலை பற்றி தனது அனுபவத்தை பகிர்ந்த பருன் தாஸ், நவீன காலத்தில் சனா சஜன் மாற்றத்தை உருவாக்கும் ஒரு பெண். இவர் சவால்களை எப்போதும் வாய்ப்பாக பார்க்கிறார். உண்மையான தலைமைத்துவம் என்பது நேர்மையும் சிறந்த நோக்கமும் கொண்டிருப்பது தான் என்பதற்கு சனா ஒரு மிகச்சிறந்த உதாரணம் என்றார்.
சனா சஜானின் கருத்து
பருன் தாஸுடன் உரையாடிய அனுபம் குறித்து சனா சஜான் பேசியதாவது, “இந்த உரையாடல் மிகவும் மனதிற்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. பருன் தாஸுடன் பேசியது எனக்கு மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. இதுபோன்ற உரையாடல்களை நான் மேலும் எதிர்பார்க்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த உரையாடல் சனாவின் சிறு வயதிலிருந்து தொடங்கி, உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய அவரது முயற்சிகள் வரை சென்றடைந்தது. நிகழ்ச்சியில் பேசிய அவர், என் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்றத் தாழ்வுகள் நிறைய இருந்தன. சில சமயம் முன்னே செல்ல வேண்டிய இடத்தில் பின்செல்லவோ அல்லது விலகிசெல்லவோ நேர்ந்தது. ஆனால் அந்த தடைகள் தான் அடுத்த படிக்கான பாலமாக மாறின என்று பேசினார்.
இந்த உரையாடல் வெறும் தொழில் வெற்றியை மட்டும் பேசாமல் வாழ்க்கையை முழுமையாகவும் தைரியமாகவும் வாழ்வதற்கான வழிகளை நமக்கு அளிப்பதாக அமைந்தது. பாருண் தாஸ் தனது கேள்விகளால் சனாவின் அனுபவங்களை ஆழமாக வெளிக்கொண்டு வந்தார். சனா, நிச்சயமற்ற நிலையை தைரியமாக ஏற்றுக்கொள்வது, பலவீனங்களுடன் கூட கனவுகளைத் தொடர்ந்து சாதிக்க முடியும் என்பதை வலியுறுத்தினார்.
டுயோலாக் நெக்ஸ்ட்என்பது நியூஸ்9 உருவாக்கிய ஒரிஜினல் பாட்காஸ்ட் தொடர். இதில் பாருண் தாஸ் வாழ்க்கையில் வெற்றிபெற்ற பெண்களுடன் உரையாடுகிறார். பெண்களுக்கு நம்பிக்கையளிக்கும் இந்த உரையாடல்கள், இந்தியாவிலும் உலக அளவிலும் பெண்களின் வளர்ச்சியை கொண்டாடும் நோக்கத்துடன் நடைபெறுகிறது.