Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்தியா பாகிஸ்தான் மோதல்…. அடுத்து என்ன? டெல்லியில் ராஜ்நாத் சிங் முக்கிய மீட்டிங்!

India Pakistan Conflict : இந்தியா பாகிஸ்தானுக்கு போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் ராஜ்நாத் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைகளின் தலைமை தளபதிகளை சந்தித்து பேசியிருக்கிறார்.

இந்தியா பாகிஸ்தான் மோதல்…. அடுத்து என்ன? டெல்லியில் ராஜ்நாத் சிங் முக்கிய மீட்டிங்!
Minister Rajnath Singh
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 09 May 2025 17:08 PM

டெல்லி, மே 09: இந்தியா பாகிஸ்தானுக்கு (India Pakistan Conflict) போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் (Minister rajnath singh) முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைகளின் தலைமை தளபதிகளை சந்தித்து பேசியிருக்கிறார்.  ஆபரேஷன் சிந்தூருக்கு பாகிஸ்தான் 2025  மே 8ஆம் தேதியான நேற்று இரவு பதிலடி தாக்குதல்  நடத்தியது. ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பாகிஸ்தான் குறிவைத்து தாக்குதல் நடத்த முயன்றது. அதாவது, ஸ்ரீநகர, அவந்திபுரா, பதான்கோட், அமிரசரஸ், கபுர்தலா, லூதியானா, உத்தரலாய், புஜ் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது.

இந்தியா பாகிஸ்தான் மோதல்

ஆனால், பாகிஸ்தானின் ட்ரோன்களை இந்தியா திறம்பட சுட்டு  வீழ்த்தியது. கிட்டதட்ட 50 ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாக தெரிகிறது. எஸ் 400 என்ற வான்பாதுகாப்பு ஆயுதம் மூலம் இந்தியா ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. வானில் பறந்த ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் துல்லியமாக இடைமறித்து, அழித்துள்ளது.

ஒரு ட்ரோன்கள் கூட இந்திய எல்லைக்குள் நுழையவில்லை.  பாகிஸ்தான் ட்ரோன் அழித்த வீடியோக்களை இந்திய ராணுவம் வெளியிட்டு இருக்கிறது.  இதனால், இருநாடுகளுக்கு பதற்றம் நிலவி வருகிறது. இதனை அறிவிக்கப்படாத போராக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முப்படைகளின் தலைமை தளபதிகளை ராஜ்நாத் சிங் சந்தித்து பேசியுள்ளது. அடுத்த கட்ட தாக்குதல்கள் குறித்தும், எல்லையில் உள்ள சூழல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

டெல்லியில் ராஜ்நாத் சிங் முக்கிய மீட்டிங்

இதற்கிடையில்,  2025 மே 8ஆம் தேதியான நேற்று இரவு நடந்த தாக்குதல் குறித்து இந்திய ராணுவம் முக்கிய கருத்தை பகிர்ந்துள்ளது.  இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய ராணுவம், “2025 மே 8,9ஆம் தேதி எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ட்ரோன்கள், ஏவுகணைகளை போர் நிறுத்த மீறல்களை மேற்கொண்டன.

ட்ரோன் தாக்குதல்கள் திறம்பட முறியடிக்கப்பட்டன என்றும், இராணுவத்தால் போர் நிறுத்த மீறல்களுக்கு தக்க பதில் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் இந்திய இராணுவம் உறுதியாக உள்ளது. அனைத்து தீய நோக்கங்களுக்கும் வலுவாக பதிலடி கொடுக்கப்படும்” என்று கூறியுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து, பஞ்சாப்,  ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  முக்கிய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதோடு, தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!...
சமந்தா தயாரிப்பில் உருவான சுபம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இத
சமந்தா தயாரிப்பில் உருவான சுபம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இத...
ஐசரி கே. கணேஷ் மகளின் திருமணம்.. ஒன்று திரண்ட கோலிவுட் பிரபலங்கள்
ஐசரி கே. கணேஷ் மகளின் திருமணம்.. ஒன்று திரண்ட கோலிவுட் பிரபலங்கள்...
பாகிஸ்தானுடன் எல்லை மோதல் தீவிரம்: வீரர் முரளி நாயக் வீர மரணம்!
பாகிஸ்தானுடன் எல்லை மோதல் தீவிரம்: வீரர் முரளி நாயக் வீர மரணம்!...
எல்லாமே கிடைக்கும்.. தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!
எல்லாமே கிடைக்கும்.. தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!...
ஏரிகளில் டன் கணக்கில் கொட்டப்படும் காய்கறிகள்: காரணம் என்ன?
ஏரிகளில் டன் கணக்கில் கொட்டப்படும் காய்கறிகள்: காரணம் என்ன?...
ரஜினியுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா.. என்ன படம் தெரியுமா?
ரஜினியுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா.. என்ன படம் தெரியுமா?...
1947 முதல் 2025 வரை.. இந்தியா பாகிஸ்தான் இடையே நீடிக்கும் போர்..
1947 முதல் 2025 வரை.. இந்தியா பாகிஸ்தான் இடையே நீடிக்கும் போர்.....
மீண்டும் குடிபோதையில் ரகளை செய்த ஜெயிலர் பட நடிகர் விநாயகன் கைது
மீண்டும் குடிபோதையில் ரகளை செய்த ஜெயிலர் பட நடிகர் விநாயகன் கைது...
ஏடிஎம் மையங்கள் 3 நாட்கள் செயல்படாதா? - அரசு சொன்ன முக்கிய தகவல்!
ஏடிஎம் மையங்கள் 3 நாட்கள் செயல்படாதா? - அரசு சொன்ன முக்கிய தகவல்!...
சென்னை: ராயப்பேட்டையில் பெண் ஐஏஎஸ் அதிகாரியை கடித்த நாய்..
சென்னை: ராயப்பேட்டையில் பெண் ஐஏஎஸ் அதிகாரியை கடித்த நாய்.....