India – Pakistan Conflict : அரப்பிக்கடலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த இந்திய கடற்படை!
Indian Navy Force took Control of Arabian Sea | இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நாளுக்கு நாள் மோதல் விரிசலைடைந்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரபிக்கடலை இந்திய அகடற்படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் : பஹல்காம் தாக்குதலுக்கு (Pahalgam Attack) பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூரை (Operation Sindoor) கையில் எடுத்துள்ள நிலையில், பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் பொதுமக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், அரபிக்கடலை (Arabian Sea) இந்திய கடற்படை (Indian Navy Force) தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய கடற்படை இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் இந்தியா – பாகிஸ்தான் மோதல்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட சுமார் 26 பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலக நாடுகள் இடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்திய கடும் கோபத்திற்கு உள்ளானது. இதன் காரணமாக அட்டாரி – வாகா எல்லை மூடல், சிந்து நதி நீர் நிறுத்தம் என நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த இந்திய அரசு, ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற அதிரடி முடிவை எடுத்தது.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய அரசு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக நேற்று ( மே 08, 2025) நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார். மேலும் அவர் ஆபரேஷன் சிந்து முடிவடையவில்லை என்றும் கூறியிருந்தார். அதன்படி, இந்திய ராணுவம் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவமும் தாக்குதல் நடத்தி வருவதால் இந்திய ராணுவம் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அரபிக்கடலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த இந்திய கடற்படை
இந்த நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்திய கடற்படை அரபிக்கடலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. துறைமுகங்கள், கடற்பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நிகழ்த்தினால் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கடற்படை தயாராக உள்ளது. பாகிஸ்தானின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், பதில் தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக அரபிக்கடலில் இந்திய கடற்படையின் போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.