Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜூலை 9 அன்று பாரத் பந்த் – என்ன திறந்திருக்கும்? எவை பாதிக்கப்படும்? – முழு விவரம்

Nationwide Strike Alert : நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் துணை அமைப்புகள் ஜூலை 9, 2025 அன்று பாரத் பந்த் என்ற பெயரில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இந்த நிலையில் அன்றைய தினம் வங்கிகள், தபால் சேவைகள், பொதுத்துறை நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து இந்த கட்டுரையில் விவரமாக பார்க்கலாம்.

ஜூலை 9 அன்று பாரத் பந்த் – என்ன திறந்திருக்கும்? எவை பாதிக்கப்படும்? – முழு விவரம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 09 Jul 2025 13:58 PM

இந்தியாவில் ஜூலை 9, 2025 அன்று பாரத் பந்த் (Bharat Bandh) எனப்படும் தேசிய வேலைநிறுத்தம் (Strike) நடைபெற உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தை மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் 23 சங்கங்கள் மேற்கொள்ளவிருக்கின்றன. இதில், அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து இந்த வேலை நிறுத்தம் நடைபெறுவதாக மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  மேலும் தொழிற்சங்கங்களை அகற்ற முயற்சிப்பதாகவும் புதிய தொழிலாளர் சட்டங்கள் தொடர்பாகவும், 10 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் துணை அமைப்புகள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.

எந்த சேவைகள் பாதிக்கப்படும்?

இந்த பாரத் பந்த்தில் 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலை நிறுத்ததின் காரணமாக வங்கிப் பணிகள், தபால் சேவைகள், நிலக்கரி சுரங்கம், தொழிற்சாலைகள், மாநில போக்குவரத்து சேவைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் விவசாயிகள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாரத் பந்த் குறித்து கருத்து

 

என்ன திறந்திருக்கும்?

பொதுவாக, பந்த் என்றாலும் சில சேவைகள் இயல்பாக இயங்கும். இந்த வேலை நிறுத்தம் நடைபற்றாலும், பள்ளிகள், கல்லூரிகள், தனியார் அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படும் என கூறப்படுகிறது.

இந்த வேலை நிறுத்தத்தில் ரயில் சேவைகள் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. இருப்பினும் ரயில் சேவைகளில் தாமங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறு. சில இடங்களில் பாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வளவு பணியாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபடுகிறார்கள் என்பதைப் பொறுத்து இந்த ரயில் சேவைகள் பாதிக்கப்படுமா, இல்லையா என்பது தெரியவரும். அரசு மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தொழிலாளர்களின் வேலை நேரம் இனி 10 மணிநேரம்.. தெலுங்கானா அரசு அறிவிப்பு..!

மேலும் ஜூலை 9, 2025 அன்று  பேருந்துகள், ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என்று கூறப்படுவதால் போக்குவரத்து பெரிதும் பாதிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது. இருப்பினும் வங்கிகள், தபால் சேவைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகிய சேவைகள் தடைபட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் பந்த் ஏற்படும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.