World Hypertension Day : உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? தவிர்ப்பது எப்படி?
World Hypertension Day : உயர் இரத்த அழுத்தத்தின் ஆபத்துகள் மற்றும் அதை அடையாளம் காண்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 17 அன்று உயர் இரத்த அழுத்த தினம் கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம், மக்கள் தங்கள் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும் கடைபிடிக்கப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தத்தின் (High Blood Pressure) ஆபத்துகள் மற்றும் அதனை அடையாளம் காண்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 17 அன்று உயர் இரத்த அழுத்த தினம் கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம், மக்கள் தங்கள் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும், பக்கவாதம் அல்லது மாரடைப்பு போன்ற அபாயங்களைத் தவிர்க்கவும் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதயம் உடலுக்கு இரத்தத்தை செலுத்தும்போது இரத்த நாளங்களில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தம் காரணமாக இது நிகழ்கிறது.
இந்த அழுத்தம் நீண்ட நேரம் நீடித்தால், அது இதயம், சிறுநீரகங்கள், மூளை மற்றும் கண்களைப் பாதிக்கும். பெரும்பாலும் இதன் அறிகுறிகள் ஆரம்பத்தில் தெளிவாக இருக்காது. ஆனால் அவை மனிதர்களின் உயிரை வங்கக் கூடியது. இரண்டு வகையான உயர் இரத்த அழுத்தங்கள் இருக்கின்றன. முதல் அழுத்தம் நம் தவறான பழக்கங்களால் ஏற்படுகிறது. இரண்டாம் வகை சில நோய்கள் மருநந்துகளால் ஏற்படுகிறது.
உயர் இரத்த அழுத்தத்துக்கான காரணங்கள்
மேலும் உணவில் அதிக உப்பு சேர்ப்பது, உடல் பருமன், மன அழுத்தம், புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் உடல் உழைப்பு இல்லாமை ஆகியவை இரத்த அழுத்தம் அதிகரிப்புக்கான காரணங்களாக இருக்கலாம். இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிகவும் முக்கியம், அதாவது உப்பு குறைவாக சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்துகளை உட்கொள்வது ஆகியவை உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
உயர் இரத்த அழுத்த தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?
உயர் இரத்த அழுத்தத்தின் ஆபத்துகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் மே 17 அன்று உயர் இரத்த அழுத்த தினம் கொண்டாடப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் என்பது ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளும் இல்லாமல் உடலை மெதுவாக பாதிக்கும் ஒரு நோயாகும், எனவே மக்கள் தங்கள் உடல்நலத்தில் சரியான நேரத்தில் கவனம் செலுத்தி, இரத்த அழுத்தத்தை பரிசோதிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
உலகெங்கிலும் ஆண்டுக்கு மில்லியன் கணக்கான மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர், ஆனால் பலருக்கு தங்களுக்கு இந்தப் பிரச்சினை இருப்பது தெரியாது. உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்தும்.
தவிர்ப்பது எப்படி ?
உயர் இரத்த அழுத்த தினம் மருந்து மட்டுமல்ல, ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் முக்கியம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது, அதாவது உப்பு குறைவாக சாப்பிடுவது, தினமும் உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தத்தைக் குறைப்பது மற்றும் வழக்கமான சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்வது போன்றவை. எவ்வளவு விரைவில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறோமோ அவ்வளவு நல்லது.
வழக்கமான உடற்பயிற்சியும் மிகவும் முக்கியம். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், யோகா அல்லது நீச்சல் போன்ற செயல்களைச் செய்யுங்கள். இவை உடலில் நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்கவும், கெட்ட கொழுப்பை (LDL) குறைக்கவும் உதவுகின்றன. புகைபிடிப்பதை விட்டுவிட்டு, குறைந்த அளவில் மது அருந்துவதும் முக்கியம், ஏனெனில் இந்த இரண்டு விஷயங்களும் கொழுப்பின் அளவை மோசமாக்கும். மேலும், தியானம், இசை அல்லது உங்களுக்குப் பிடித்த செயல்பாடு மூலம் மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்.