தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

Health begins with banana : அன்றாட உணவில் தவறாமல் இடம் பிடிக்கும் வாழைப்பழம், பலவிதமான மருத்துவ நன்மைகள் கொண்ட ஒரு சக்திமிக்க உணவாகும். தினசரி அதனை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

மாதிரி புகைப்படம்

Published: 

08 May 2025 15:30 PM

சில உணவுப் பொருட்கள் எளிதாகக் கிடைக்கக்கூடியவையாக இருக்கும். அதனால், அவற்றை பெரிதாகக் கவனிக்காமல் சாதாரணமாக எடுத்துக் கொள்வதுண்டு. ஆனால் உண்மையில், இயற்கை தரும் இந்த உணவுகளில் பலவிதமான சத்துகள் நிறைந்துள்ளன. அதாவது, உணவே மருந்து என்பதற்கு உண்மையான எடுத்துக்காட்டுகள் நம்முடைய சமையலறையிலேயே இருக்கின்றன. வைட்டமின் (Vitamin), மினரல்கள், நார்ச்சத்து (Fiber), ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவை நிறைந்த பல உணவுப் பொருட்கள் விலையுயர்ந்த மருந்துகளுக்கு மாற்றாக இருக்கின்றன. அந்த வகையில் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று வாழைப்பழம் (Banana). எளிதாக கிடைக்கும், அதன் விலையும் குறைவு.  இந்த வாழைப்பழம், பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்ப்போம்.

உடலுக்கு உடனடி சக்தி வழங்கும்

வாழைப்பழம் கார்போஹைட்ரேட்டுகள், குறிப்பாக ஃப்ருக்டோஸ், கிளுகோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சக்கரை வகைகள் நிறைந்தது. இவை உடனடியாக சக்தியை வழங்கும். இதன் காரணமாகவே விளையாட்டு வீரர்கள் அல்லது உடலுக்கு அதிக உழைப்பு தேவையானவர்கள் வாழைப்பழத்தை அதிகம் விரும்புகின்றனர்.

செரிமாணத்திற்கு உதவும்

வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இது குடலின் இயக்கத்தை சரியாக வைத்திருக்க உதவுகிறது. மலச்சிக்கல், வாயுத்தொல்லை போன்ற பிரச்னைகளை தடுக்கிறது. இதனால் வயிறு தொடர்பான பல பிரச்னைகளுக்கு வாழைப்பழம் ஒரு இயற்கையான தீர்வாக விளங்குகிறது.

இரத்த அழுத்த கட்டுப்படுத்தும்

வாழைப்பழத்தில் பொட்டாசியம்சத்து அதிகமாக கொண்டிருக்கிறது. இது நரம்புகள் மற்றும் தசைகளை சரியாக இயங்கச் செய்யும். மேலும், இரத்த நாளங்களில் சீரான அழுத்தத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

தோலை காக்கும் சக்தி

வாழைப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் பல முக்கிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை தோலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ் எனப்படும் நச்சுகளை நீக்குகிறது. இது நம்மை வசதியான தோல் மற்றும் இளமை தோற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

எலும்புகளை பலத்தை அதிகரிக்கும்

வாழைப்பழம் உள்ள முக்கிய சத்துக்கள், குறிப்பாக மெக்னீசியம், கால்சியம், மற்றும் சில வைட்டமின் பி, எலும்புகளின் பலத்தை அதிகரிக்கின்றன. அதே சமயம், தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

மன அழுத்தத்தை குறைக்கும்

வாழைப்பழத்தில் டிரிப்டோபேன் எனும் அமினோ அமிலம் உள்ளது. இது மூளையின் செரடோனின் உற்பத்தியை தூண்டுகிறது. இது மனதை சீராக வைத்திருக்கவும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

 தினமும் ஒரு வாழைப்பழம் உணவில் சேர்ப்பது நிறைய பலன்களை நமக்கு அளிக்கும். இயற்கையின் கொடையாக விளங்கும் இந்த வாழைப்பழத்தை இன்று முதல் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)