Chikoo Benefits :சப்போட்டோவால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?

Benefits Of Chickoo : சப்போட்டா பழத்தில் வைட்டமின்கள் ஏ, பி, சி, இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் அது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. சப்போட்டா சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய ஆரோக்கிய நன்மைகளை இந்க கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.

Chikoo Benefits :சப்போட்டோவால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?

மாதிரி புகைப்படம்

Published: 

14 May 2025 23:49 PM

நாம் உண்ணும் உணவும், வாழ்க்கை முறையும் நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன. எனவே, அன்றாட உணவில் ஆரோக்கியமான உணவுகளைச் சேர்ப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக உணவில் நிறைய காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்வது அவசியம் மேலும் அந்த காலங்களில் விளையும் பழங்கள் மற்றும் காய்கிறிகளை சாப்பிடுவது நமது உடலுக்கு பெரிதும் நன்மை பயக்கும். அந்த வகையில் சப்போட்டா கோடைகாலங்களில் கிடைக்கும் பழங்களில் ஒன்றாகும். இதில் வைட்டமின்கள் ஏ, பி, சி, இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.   சப்போட்டா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

செரிமானம் மேம்படும்

சப்போட்டாவில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. எனவே, சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைப் போக்கவும் உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த சப்போட்டா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.

ஆற்றலை வழங்கும்

சப்போட்டாவில் உள்ள இரும்புச்சத்து, பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் ஆகியவை இரத்த சோகையைத் தடுத்து உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன.

எலும்புகள் மற்றும் பற்களுக்கு நல்லது

சப்போட்டாவில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. எனவே, இதை உணவில் சேர்ப்பது எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்

சப்போட்டாவில் அதிக பொட்டாசியம் உள்ளதால் அதனை அதிகம் உட்கொள்வதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

கண் ஆரோக்கியம்

சப்போட்டாவில் வைட்டமின் ஏ இருப்பதால் அதனை அதிகம் சாப்பிடுவது கண் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்

சப்போட்டாவில் வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. எனவே, இதை உணவில் சேர்ப்பது சில புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உடல் பருமனைக் குறைக்க

சப்போட்டாவில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. ஆனால் கலோரிகள் மிகவும் குறைவு.  எனவே, இதை தொடர்ந்து சாப்பிடுவது பசியைக் குறைக்கவும், அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கவும், அதன் மூலம் எடையைக் குறைக்கவும் உதவும்.

தோல் ஆரோக்கியம்

சப்போட்டா சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இதில் உள்ள வைட்டமின் ஈ சருமத்திற்கு நன்மை பயக்கும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)