தினமும் காலையில் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

Benefits of Eating Soaked Almonds : பாதாமில் நம் உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. குறிப்பாக தினமும் இரவில் ஊற வைத்த பாதாமை காலையில் சாப்பிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இந்த கட்டுரையில் இரவில் ஊற வைத்த பாதாமை காலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தினமும் காலையில் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

மாதிரி புகைப்படம்

Published: 

23 May 2025 23:23 PM

பாதாமில் (Almond) உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதனை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் சாப்பிடும்போது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. செரிமானம், இதய ஆரோக்கியம், மூளை (Brain) செயல்பாடு, எடை கட்டுப்பாடு மற்றும் தூக்கமின்மை பிரச்னைகளுக்கு பாதாம் மிகவும் உதவியாக இருக்கும். பாதாம் பருப்பு உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இருப்பினும், அவற்றை ஊறவைத்து சாப்பிட்டால் இன்னும் அதிக நன்மைகள் கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக காலையில் இதை சாப்பிடுவதால், உடலுக்கு பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இதை தினமும் செய்வதால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மன மகிழ்ச்சியும் கிடைக்கும். ஊற வைத்த பாதாமை காலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

  • இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் பாதாம் பருப்பை தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில், அதனை , தோலுரித்து, சாப்பிடுங்கள். இந்த முறையில் பாதாம் சாப்பிடுவது, பாதாமில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் எளிதாக உறிஞ்ச உதவும்.
  • ஊறவைத்த பாதாமில் நார்ச்சத்து அதிகம். இது செரிமான பிரச்னைகளைக் குறைக்கிறது. இது மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்திலிருந்து நிவாரணம் அளித்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
  • எடை குறைக்க விரும்புவோருக்கு பாதாம் ஒரு நல்ல வழி. இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதங்கள் பசியைக் கட்டுப்படுத்தி, அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கின்றன. குறைந்த கலோரிகளையும், அதிக ஊட்டச்சத்தையும் அளிக்கும் பாதாம், உடலை உற்சாகமாக வைத்திருக்கும்.
  • பாதாமில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இதயத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். இது இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
  • தினமும் காலையில் பாதாம் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. பாதாமில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளை செல்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. மாணவர்கள் இதை அடிக்கடி உட்கொண்டால் நினைவாற்றல் மேம்படும்.
  • பாதாமில் காணப்படும் தாது மெக்னீசியம் நரம்புகளை அமைதிப்படுத்தி, நன்றாக தூங்க உதவுகிறது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இதை உட்கொண்ட பிறகு தூக்கத்தில் மாற்றத்தைக் கவனிக்கலாம். தினமும் ஒரு சில பாதாம் பருப்புகளை ஊறவைத்து சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்வது பல உடல் மற்றும் மன நன்மைகளை அளிக்கும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)