பிரபல நடிகரின் கையெழுத்தை ஆபிசில் போட்டோவாக மாட்டியிருக்கிறேன்.. விஜய் சேதுபதி சொன்ன பிரபலம் யார் தெரியுமா?

Vijay Sethupathi : நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி முன்னதாக பேசியிருந்த வீடியோ ஒன்றில் பிரபலம் ஒருவரின் கையெழுத்து போட்டோவாக ஆபிசில் மாட்டியுள்ளேன் என்று கூறியிருக்கிறார். அந்த பிரபலம் யார் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்

பிரபல நடிகரின் கையெழுத்தை ஆபிசில் போட்டோவாக மாட்டியிருக்கிறேன்.. விஜய் சேதுபதி சொன்ன பிரபலம் யார் தெரியுமா?

விஜய் சேதுபதி

Published: 

15 May 2025 21:33 PM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் ஆரம்பத்தில் சினிமாவில் சிறு சிறு ரோலில் நடித்து சினிமாவில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து படங்களில் துணை நடிகாராகவும், அதைத் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் விடுதலை 2 (Viduthalai 2). இந்த படத்தின் முதல் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதி சில காட்சிகளில் மட்டுமே இடம் பிடித்திருந்தார். அதை தொடர்ந்து பாகம் 2ல் முழுமையாக இவரின் கதாபாத்திரம்தான் முக்கியத்துவம் வகித்தது. இந்த படத்தைத் தமிழ் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி ஏஸ், ட்ரெயின், தலைவன் தலைவி (Ace, Train, Thalaivan Thalaivii) என அடுத்தடுத்த தமிழ்ப் படங்களில் நடித்து வந்தார்.

இந்த படங்கள் எல்லாம் தற்போது ஷூட்டிங் முடிந்து ரிலீசிற்கு தயாராகிவருகிறது. இதில் இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஏஸ். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகை ருக்மிணி வசந்த் நடித்திருக்கிறார். இந்தப்படமானது வரும் 2025, மே 23ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி முன்னதாக பேசிய வீடியோ ஒன்றில் பிரபல நடிகர் ஒருவரின் கையெழுத்துப் போட்டோ ஃப்ரேமாக தனது அலுவலகத்தில் மாட்டியுள்ளேன் என்று கூறியிருக்கிறார்.  அந்த பிரபல வேறு யாருமில்லை, மலையாள பிரபல நடிகர் மோகன்லால்தான். அவரின் அவரின் கையெழுத்தைத் தனது அலுவலகத்தில் போட்டோவாக மட்டியுள்ளேன் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார். அந்த தகவல் குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

நடிகர் விஜய் சேதுபதி பேசிய விஷயம் :

அந்த வீடியோவில் நடிகர் விஜய் சேதுபதி, “எனக்கு மோகன்லால் சாரை அவ்வளவு பிடிக்கும், எனது ஆபிசில் நான் ஒருவரின் கையெழுத்தை போட்டோவாக மாட்டியிருக்கிறேன் என்றால் நடிகர் மோகன்லால் கையெழுத்தைத்தான். எனது ஆபிசில் இருக்கும் விஷயம் என்னை பார்க்கவரும் பலருக்கும் தெரிந்திருக்கும்” என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதியின் இன்ஸ்டாகிராம் பதிவு :

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கிலும் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கவுள்ளார். இந்த படத்தின் தொடர்பான அறிவிப்புகளை கடந்த 2025, ஏப்ரல் தொடக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார். இந்த படத்தின் மூலம் அவர் தெலுங்கிலும் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நிவேதா தாமஸ் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவலானது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. மேலும் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் மட்டும் தமிழில் காந்தி டால்க்ஸ், ஏஸ், ட்ரெயின் மற்றும் தலைவன் தலைவி என 4 படங்கள் ரிலீசிற்கு தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.