Vetrimaaran : லோகேஷ் கனகராஜ் பாணியில் ‘சினிமாட்டிக் யூனிவெர்சை’ உருவாக்கும் வெற்றிமாறன்!

Vetrimaarans Cinematic Universe : தமிழ் சினிமாவில் இயக்குநர் வெற்றிமாறன் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் இயக்கத்தில் புதிய படங்கள் உருவாகிவரும் நிலையில், அவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜைப் போல, சினிமாட்டிக் யூனிவெர்சை உருவாக்கவுள்ளாராம். அது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

Vetrimaaran : லோகேஷ் கனகராஜ் பாணியில் சினிமாட்டிக் யூனிவெர்சை உருவாக்கும் வெற்றிமாறன்!

வெற்றிமாறன்

Updated On: 

30 Jun 2025 16:50 PM

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருந்து வருபவர் வெற்றிமாறன் (Vetrimaaran). இவரின் இயக்கத்தில் தனுஷ்  (Dhanush) முதல் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) வரை பல நடிகர்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். இதில் தனுஷ் நடிப்பில் மட்டும் வெற்றிமாறன் கிட்டத்தட்ட 4 படங்களை இயக்கியிருக்கிறார். இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இந்நிலையில், இப்படங்களைத் தொடர்ந்து வடசென்னை 2 படத்திலும் தனுஷ் கதாநாயகனாக இணைந்து நடிக்கவுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் இறுதியாக விஜய் சேதுபதி விடுதலை 2 (Viduthalai 2) படத்தில் இணைந்து நடித்திருந்தார். இப்படமானது கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது என்றே கூறலாம். இப்படத்தை அடுத்ததாக சிலம்பரசனுடம் புதிய படத்திலும் இணைந்துள்ளார். இந்நிலையில், இப்படமானது வடசென்னை (Vada Chennai) படத்தின் பின்னணியில் உருவாகிவருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜைத் ( Lokesh Kanagaraj) தொடர்ந்து வெற்றிமாறனும், தனது படங்களின் கதையுடன் தொடர்புடைய புதிய படத்தை இயக்கத் தொடங்கிவிட்டார் என்று கூறப்படுகிறது. லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்சை (Lokesh Cinematic Universe)  போல, வெற்றிமாறன் சினிமாட்டிக் யூனிவெர்ஸாக (Vetrimaaran Cinematic Universe), சிலம்பரசனின் புதிய படமானது உருவாக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

சிலம்பரசனின் ரீசென்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் :

லோகேஷ் கனகராஜை தொடர்ந்து சினிமாட்டிக் யூனிவர்சல் உருவாக்கும் வெற்றிமாறன் :

சிலம்பரசன் தற்போது இயக்குநர் வெற்றிமாறனின் கூட்டணியில் புதிய படத்தில் இணையவுள்ளார். இவர் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் STR 49 படத்தில் நடிக்கவிருந்த நிலையில், அப்படமானது கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தைத் தொடர்ந்துதான் வெற்றிமாறனுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார் சிலம்பரசன். இப்படத்தின் அறிவிப்பு வீடியோவின் ஷூட்டிங் சமீபத்தில் நடைபெற்றிருந்தது. அது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் கதையானது வடசென்னை படத்தின் தொடர்பான கதைக்களத்துடன் உருவாக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படமானது லோகேஷ் கனகராஜின் கைதி, விக்ரம் மற்றும் லியோ படங்களை போல, வெற்றிமாறனின் புதிய படம் உருவாகவுள்ளது. இந்நிலையில் இப்படமானது வெற்றிமாறனின் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் வரிசையில் முதல் படமாக சிம்பு படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிமாறன் சிலம்பரசன் பட அறிவிப்பு வீடியோ

சிம்பு மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தின் அறிவிப்பு வரும் 2025ம் ஆண்டு ஜூலை 2ம் வாரத்தில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இப்படத்தில் வி கிரியேஷன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோவுடன் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories
காமெடி படத்தில் இத்தனை ட்விஸ்டா? அமேசான் ப்ரைம் வீடியோவில் இருக்கும் இந்த மதுர மனோகர மோஹம் படத்தை கண்டிப்பா பாருங்க!
ஜோதிகா மற்றும் கார்த்தி இல்லாமல் சூர்யா இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணும் அந்த ஒரே ஒரு தமிழ் நடிகர்… யார் தெரியுமா?
பிளாக் மெயில் முதல் சரண்டர் வரை… இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
இனி ஃபேமிலி செண்டிமெண்ட்லாம் ஹிட்டடிக்கதுனு நீ சினிமாவை விட்டு போ சொன்னாங்க – இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு!
பண மோசடி வழக்கில் பிரபல காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டேன்…. ‘கிங்டம்’ பட நிகழ்வில் விஜய் தேவரகொண்டா உருக்கம்!