Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கூகுளில் Thug Life டைப் பண்ணுங்க… ரங்கராய சக்திவேல் வந்து ஸ்கிரீனை அடி நொறுக்கறாரு! – வித்தியாசமான புரமோஷன்

Thug Life Surprise : மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள தக் லைஃப் படம் ஜூன் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் கூகுளுடன் இணைந்து படக்குழு செய்த மேஜிக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கூகுளில் Thug Life டைப் பண்ணுங்க… ரங்கராய சக்திவேல் வந்து ஸ்கிரீனை அடி நொறுக்கறாரு! – வித்தியாசமான புரமோஷன்
தக் லைஃப் கமல்ஹாசன்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 24 May 2025 22:35 PM

நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக தயாரித்து நடித்திருந்த படம் தக் லைஃப் (Thug Life). இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்திருக்கின்றனர். முன்னதாக இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய நாயகன் படம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக இருக்கும். குறிப்பாக அந்தப் படம் பல இயக்குநர்களை தமிழ் சினிமாவுக்கு அளித்திருக்கிறது. அந்த அளவுக்கு அந்தப் படம் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறது. இந்த நிலையில் இருவரும் மீண்டும் இணைந்துள்ள தக் லைஃப் படத்துக்கு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்து கதை எழுதியுள்ளனர். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தக் லைஃப் பட புரமோஷனில் கமல் நெகிழ்ச்சி

தக் லைஃப் படத்தை படக்குழுவினர் கேரளா, மும்பை, ஆந்திரா, தெலங்கானா என பறந்து பறந்து புரமோட் செய்து வருகின்றனர். எல்லா இடங்களிலும் படக்குழுவினருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், தன்னை கேரளா நடிகராக்கியிருந்தாலும், தெலுங்கு திரையுலகம் தான் ஸ்டாராக மாற்றியதாகவும் அதற்காக தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி எனவும் தெரிவித்தருந்தார். மேலும் தெலுங்கில் வெளியான மரோசரித்ரா திரைப்படம் தான் தன்னை ஹிந்தியில் ஏக் துஜே கேலியே படம் வரை கொண்டு சென்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

கூகுளில் தக் லைஃப் மேஜிக்

 

இந்த நிலையில் தக் லைஃப் படத்தின் புரமோஷனின் ஒரு பகுதியாக தயாரிப்பு நிறுவனம் கூகுளோடு கை கோர்த்திருக்கிறது. அதன் படி கூகுளில் ஆங்கிலத்தில் Thug Life என்று டைப் செய்து சர்ச் செய்தால் கை போன்ற ஒரு குறியீடு வரும். அதனை கிளிக் செய்தால் அது அந்தப் பகுதியில் உள்ள தக் லைப் கமல் ஸ்டைலில் அந்தப் பகுதியில் உள்ள போஸ்ட்களை அடித்து காலி செய்யும். இது சவுண்ட் எஃபெக்ட்ஸ் உடன் வருகிறது. இது புதுமையான புரமோஷனாக இருக்கிறது.

தக் லைஃப் படம் வருகிற ஜூன் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. அமர் ஹை என்ற பெயரில் தான் எழுதிய கதையை இயக்குநர் மணிரத்னம் தனது ஸ்டைலில் திரைக்கதை அமைத்து படமாக்கியிருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தில் கமலுடன் சிம்புவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

பீப் சாங் பிரச்னையில் இருந்த போது ரஹ்மான் செய்த செயல் - சிம்பு
பீப் சாங் பிரச்னையில் இருந்த போது ரஹ்மான் செய்த செயல் - சிம்பு...
பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் - குஜராத்தை சேர்ந்த உளவாளி கைது!
பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் - குஜராத்தை சேர்ந்த உளவாளி கைது!...
சந்திரமுகியில் அவர் நடித்திருந்தால் நன்றாக இருக்கும்- ஜோதிகா!
சந்திரமுகியில் அவர் நடித்திருந்தால் நன்றாக இருக்கும்- ஜோதிகா!...
ராகுல் காந்தி மீது ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்!
ராகுல் காந்தி மீது ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்!...
ஆர்பிஐயின் விதியால் நகைக்கடன் பெறுவதில் சிக்கல் - விஜய் கண்டனம்!
ஆர்பிஐயின் விதியால் நகைக்கடன் பெறுவதில் சிக்கல் - விஜய் கண்டனம்!...
Thug Life என டைப் செய்தால் கூகுளில் வரும் மேஜிக் - வைரல் வீடியோ
Thug Life என டைப் செய்தால் கூகுளில் வரும் மேஜிக் - வைரல் வீடியோ...
உடல் குளிர்ச்சியைத் தரும் காய்கறிகள்.. நீரிழிப்பை தடுக்கும்!
உடல் குளிர்ச்சியைத் தரும் காய்கறிகள்.. நீரிழிப்பை தடுக்கும்!...
தலைவா படத்தில் சந்தானம் பண்ண விஷயத்தை மறக்க முடியாது- விஜய்!
தலைவா படத்தில் சந்தானம் பண்ண விஷயத்தை மறக்க முடியாது- விஜய்!...
இந்தியாவில் எக்ஸ் தளம் முடங்கியது - பயனர்கள் கோபம்
இந்தியாவில் எக்ஸ் தளம் முடங்கியது - பயனர்கள் கோபம்...
பதவி நீக்கத்தால் தூக்கமில்லாமல் தவித்தேன்.. அன்புமணி புலம்பல்!
பதவி நீக்கத்தால் தூக்கமில்லாமல் தவித்தேன்.. அன்புமணி புலம்பல்!...
டெலிகிராமை தடைசெய்யும் வியாட்நாம் அரசு - என்ன காரணம் தெரியுமா?
டெலிகிராமை தடைசெய்யும் வியாட்நாம் அரசு - என்ன காரணம் தெரியுமா?...