மீண்டும் இணையும் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி… கவனம் பெறும் தகவல்!
Director Vetrimaaran: தமிழ் சினிமாவில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் இதுவரை வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இறுதியாக இவர்களது கூட்டணியில் வெளியான அசுரன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இவர்களது கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது.

இயக்குநர் வெற்றிமாறன் (Director Vetrimaaran) இறுதியாக விடுதலை பாகம் 2 படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யாவின் (Actor Suriya) நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். இதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வரும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனுஷ் உடன் அடுத்தப் படத்தில் இணைய உள்ளது குறித்து பேசியுள்ளார். மேலும் அந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணி இணைந்தால் நிச்சயமாக படம் ஹிட் என்பது ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டது நிதர்சனமான உண்மை.
தனுஷ் படத்தில் இயக்குநராக அறிமுகம் ஆன வெற்றிமாறன்:
தமிழ் சினிமாவில் கடந்த 2007-ம் ஆண்டு தனுஷை வைத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய படம் பொல்லாதவன். இந்தப் படத்தின் மூலமாகதான் தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்குநராக அறிமுகம் ஆனார். அதனாலோ என்னவே வெற்றிமாறன் தான் எழுதும் அனைத்து கதைகளையுமே தனுஷை நாயகனாக நினைத்தே எழுதுவதாக சினிமா வட்டாரங்களில் ஒரு பேச்சு உள்ளது.
பொல்லாதவன் படம் வெற்றிமாறனுக்கும் அறிமுக படம் என்றால் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது படத்தையும் நடிகர் தனுஷை வைத்தே இயக்கினார் வெற்றிமாறன். அதன்படி 2011-ம் ஆண்டு வெளியானது ஆடுகளம். சேவல் சண்டையை மையமாக வைத்து உருவான இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து இவர்களது கூட்டணியில் வெளியான வடசென்னை, அசுரன் ஆகிய படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்ததாக இந்தக் கூட்டணி எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவளுடன் காத்திருந்தனர்.
மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி:
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் இறுதியாக கடந்த 2019-ம் ஆண்டு அசுரன் படம் திரையரங்குகளில் வெளியானது. சாதி வன்கொடுமையை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த கூட்டணியில் படம் உருவாக உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாடிவாசல் படத்தை உறுதி செய்த தயாரிப்பாளர்:
அகிலம் ஆராதிக்க “வாடிவாசல்” திறக்கிறது#VetriMaaran @Suriya_offl#VaadiVaasal pic.twitter.com/ZPWfCDkF3C
— Kalaippuli S Thanu (@theVcreations) January 15, 2025
மேலும் இந்த கூட்டணி மூலம் வடசென்னை 2 படம் உருவாக உள்ளது என்ற தகவல் ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் சூர்யாவின் நடிப்பில் வாடிவாசல் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக இந்தப் படத்தில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.