Silambarasan : கமல் சார் கழுத்தை பிடிச்சிட்டேன்.. அந்த காட்சியில் நடிக்கக் கஷ்டப்பட்டேன்.. சிலம்பரசன்!

Silambarasan And Kamal Haasan : நடிகர்கள் சிலம்பரசன் மற்றும் கமல் ஹாசனின் முன்னணி நடிப்பில் வெளியீட்டிற்கு மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடந்தது. அதில் சிம்பு, கமலுடன் கழுத்தைப் பிடிக்கும் காட்சியில் நடித்துக் குறித்துப் பேசியுள்ளார்.

Silambarasan : கமல் சார் கழுத்தை பிடிச்சிட்டேன்..  அந்த காட்சியில் நடிக்கக் கஷ்டப்பட்டேன்.. சிலம்பரசன்!

சிலம்பரசன் மற்றும் கமல்

Published: 

25 May 2025 16:56 PM

நடிகர் கமல்ஹாசனின் (Kamal Haasan) 234வது திரைப்படமாகத் திரைப்படமாக கடந்த 2023ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்டதுதான் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தின் கதையை நடிகர் கமல்ஹாசன் எழுத, இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் (Nayakan) படத்தைத் தொடர்ந்து, பல ஆண்டுகளுக்கு பின் கமல் இந்த படத்தில் நடித்துள்ளார். தக் லைஃப் படத்தில் கமல் ஹாசனை தொடர்ந்து லீட் ரோலில் நடித்துள்ளவர் சிலம்பரசன் (Siambarasan). கிட்டத்தட்ட இந்த படத்தில் முக்கிய ஹீரோக்களாக இருவருமே உள்ளனர். இந்த படமானது அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் க்ரைம் த்ரில்லர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த 2025, மே 17ம் தேதியில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றது.

இந்த படமானது வரும் 2025, ஜூன் 5ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து கடந்த 2025, மே 24ம் தேதியில் சென்னையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிலம்பரசன், தக் லைஃப் பட ட்ரெய்லரில் கடைசி காட்சியில், கமல் மற்றும் சிம்பு கழுத்தை பிடிப்பதுபோல உள்ள காட்சியில் நடிக்கும்போது ஏற்பட்ட, கஷ்டம் மற்றும் பயத்தைப் பற்றிக் கூறியுள்ளார்.

தக் லைஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு

நடிகர் சிலம்பரசன் பகிர்ந்த விஷயம் :

அந்த நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன், “தக் லைஃப் பட ட்ரெய்லரில் கடைசி காட்சியை அனைவரும் பார்த்திருப்பீர்கள். அதன் நான் மற்றும் கமல் சார் இருவரும் கழுத்தைப் பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருக்கும். அந்த காட்சியில் நான் நடிக்கும்போது கமல் சாரின் கழுத்தை எப்படிப் பிடிப்பது என்று, அவரிடம் கேட்டுவிட்டு சாதாரணமாகக் கழுத்தைப் பிடிப்பதுபோல ஆக்ஷ்ன் செய்தேன். உடனே மணிரத்னம் சார், கட் சொல்லிவிட்டு கழுத்தை உண்மையாகவே இறுக்கமாகப் பிடிக்கச்சொன்னார்.

நானும் யோசித்து கமல் சாரின் கழுத்தை இறுக்கமாகப் பிடித்தால் அவர் கோபப்பட்டுவிடக் கூடாது என என்னை மீண்டும் நான் கழுத்தைச் சாதாரணமாகப் பிடித்து, எனது முகபாவனையை மாற்றிக் கொண்டேன். மீண்டும் கட் சொல்லிவிட்டார் மணி சார். அதன் பிறகு யோசித்தேன் இனி மணி சாரை கட் சொல்ல விடக்கூடாது எனக் கமல் சார் கழுத்து இறுக்கமாகப் பிடித்துவிட்டேன்.

அதன் பிறகு கமல் சார் உண்மையிலே வலிக்கிற மாதிரி நடிக்கிறாரா இல்லை வலிக்கிறதா என்று கூட எனக்குத் தெரியவில்லை. இந்த மேடையில் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று சிலம்பரசன் கூறியிருந்தார்.