Sai Abhyankkar: சாய் ப்ரோ பிஜிஎம் அனிருத்துக்கும் மேல.. ரசிகரின் பேச்சிற்கு சாய் அபயங்கரின் ரியாக்ஷ்ன்.. வைரலாகும் வீடியோ!

Sai Abhyankkars Viral BGM Fan Reaction: தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் இளம் இசையமைப்பாளராக வலம்வருபவர் சாய் அபயங்கர். இவரின் இசையமைப்பில் பல்டி என்ற படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் வெளியீட்டின்போது, ரசிகர் ஒருவரின் கேள்விக்கு சாய் அபயங்கர் கொடுத்த ரியாக்ஷ்ன் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Sai Abhyankkar: சாய் ப்ரோ பிஜிஎம் அனிருத்துக்கும் மேல.. ரசிகரின் பேச்சிற்கு சாய் அபயங்கரின் ரியாக்ஷ்ன்.. வைரலாகும் வீடியோ!

சாய் அபயங்கர்

Published: 

30 Sep 2025 08:30 AM

 IST

தமிழ் சினிமாவில் பிரபல இளம் இசையமைப்பாளராக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar). இவர் பிரபல பின்னணி பாடகரான திப்புவின் (Tippu) மகனாவார். இவர் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் இசையமைப்பாளராக இருந்து வருகிறார். தனது 19 வயதிலேயே சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது, பிரம்மாண்ட இயக்குனர்களின் படங்களுக்கெல்லாம் இசையமைத்து வருகிறார். இவரின் இசையமைப்பில் மலையாளத்தில் வெளியான முதல் படம்தான் பல்டி (Balti). இந்தப் படத்தில் நடிகர்கள் ஷேன் நிகம் (Shane Nigam) மற்றும் சாந்தனு பாக்யராஜ் (Shanthanu Bhagyaraj) இணைந்து நடித்திருந்தனர்.

இந்த பல்டி படம்தான் சாய் அபயங்கரின் முதல் மலையாள படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ரிலீஸின்போது, ரசிகர் ஒருவர் சாய் அபயங்கரிடம் கேட்டகேள்விக்கு, அவர் கொடுத்த ரியாக்ஷ்ன் தொடர்பான வீடியோ இணையத்தில் படு வைரலாகிவருகிறது. இது தொடர்பான வீடியோவை நீங்களே பாருங்கள்.

இதையும் படிங்க : மீசையமுறுக்கு 2வில் நடிக்க மறுத்த இசையமைப்பாளர்.. யார் தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் ரசிகரின் கேள்விக்கு சாய் அபயங்கரின் ரியாக்ஷ்ன் வீடியோ :

இந்த வீடியோவில் ரசிகர் ஒருவர், “சாய் ப்ரோ உங்க பிஜிஎம் அனிருத்தைவிடவும் சிறந்ததாக இருக்கிறது” என கூறியிருந்தார். அதற்கு சாய் அபயங்கர், “நிறைய நன்றி என கையெடுத்து அந்த ரசிகரை வணங்கினார். இது தொடர்பான வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

சாய் அபயங்கர் பல்டி படத்திற்காக வாங்கிய சம்பள விவரம் :

இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், பல்டி என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவரை நடிகர் மோகன்லால் அறிமுகப்படுத்திவைத்தார். இந்த பல்டி படத்தை இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்க , நடிகர்கள் ஷேன் நிகம், சாந்தனு பாக்யராஜ், ப்ரீத்தி அஸ்ரானி, செல்வராகவன் மற்றும் அல்போன்ஸ் புத்ரன் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இதையும் படிங்க : தமிழ் சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.. ரேஸ் களத்தில் அஜித் பேச்சு!

இந்த படமானது கபடி மற்றும் நண்பர்கள் தொடர்பான கதைக்களத்தில், கடந்த 2025 செப்டம்பர் 26ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இந்த் படத்திற்காக்க சாய் அபயங்கர் சுமார் ரூ 2 கோடிகளை சம்பளமாக பெற்றாராம். மலையாள சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படத்திலே ரூ 2 கோடி சம்பளமாக பெற்றவர் சாய் அபயங்கர்தான் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவலும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.