Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

OTT Review : அதிரடி க்ரைம் திரில்லர்.. பிருத்விராஜின் இந்த மலையாள படத்தை பார்த்திருக்கிறீர்களா?

Must-watch Malayalam thriller Movie : சமீப காலமாக திரில்லர் படங்கள் ஓடிடி தளங்களில் பிரபலமடைந்து வருவது தெரிந்ததே. சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படங்களைப் பார்ப்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படிப்பட்ட பிரபல மலையாள திரைப்படம் பற்றி முழுமையாக பார்க்கலாம்.

OTT Review : அதிரடி க்ரைம் திரில்லர்.. பிருத்விராஜின் இந்த மலையாள படத்தை பார்த்திருக்கிறீர்களா?
நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் Image Source: X
barath-murugan
Barath Murugan | Updated On: 26 Apr 2025 20:11 PM

முன்னதாக திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் திரையரங்குகளில் (theaters) சென்று பார்ப்பார்கள். அதுவும் மாஸ் ஹீரோக்களின் படங்கள் என்றால் தியேட்டர்களில் பல மாதங்கள் ஓடும். ஆனால் தற்போதுள்ள இணையதள வளர்ச்சியைத் தொடர்ந்து, திரையரங்குகளில் படங்கள் ஒரு மாதத்திற்கும் மேல் ஓடுவதில்லை. திரைப்படங்கள் வெளியாகி ஒரே மாதத்தில் ஓடிடியில் (OTT) வெளியாகிவிடுகின்றன. அந்த வகையில் முற்றிலும் சஸ்பென்ஸ் (suspense) நிறைந்த, க்ரைம் த்ரில்லர் (Crime thriller) படத்தைப் பற்றிப் பார்க்கலாமா?  எந்த படம் எந்த ஓடிடியில் உள்ளது. அந்த படத்தின் கதைக்களம் என்ன என்பது குறித்து முழுமையாகப் பார்க்கலாம். ஓடிடி தளங்களில் சஸ்பென்ஸ் திரில்லர் படங்கள் அதிகளவில் வெளியாகின்றன. மக்களைக் கவர்ந்த திகில், ஹாரர் மற்றும் திரில்லர் படங்களைத் தயாரிப்பாளர்கள் வெளியிடுகிறார்கள். இந்தச் சூழலில், உங்களை முழு மனதுடன் உற்சாகப்படுத்தும் ஒரு திரைப்படம் இருக்கிறது.

திரில்லர் படங்களை விரும்புபவர்கள் இந்தப் படத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். இது உங்களை சுமார் 128 நிமிடங்களுக்கு வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். படத்தில் சில எதிர்பாராத திருப்பங்களும் அதிர்ச்சியூட்டும் காட்சிகளும் உள்ளது. அந்த திரைப்படத்தின் டைட்டில் “போலீஸ் ஸ்டோரி 2“. இது மலையாள மொழியில் வெளியான திரைப்படம் ஆகும். இந்தப் படத்தில் பிரபல நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாரன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

போலீஸ் ஸ்டோரி 2 படத்தின் நடிகர்கள் :

இப்படத்தில் அதிதி பாலன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, சுசித்ரா பிள்ளை, சைலஜா அன்பு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கதை ஒரு கொலை மர்மத்தைத் தீர்ப்பதை அடிப்படையாகக் கொண்டது. படம் தொடங்கிய 5 நிமிடங்களுக்குள் சஸ்பென்ஸ் தொடங்கிவிடும்.

போலீஸ் ஸ்டோரி 2 படத்தைக் கதைக்களம் :

இந்த படத்தின் கதைக்களமானது, அமைச்சரின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு குளத்தில் ஒரு மனித மண்டை ஓடு கண்டெடுக்கப்படுகிறது. இது அந்த நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. இந்த வழக்கைத் தீர்க்கும் பொறுப்பு ஏ.சி.பி சத்யஜித்திடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த சத்யஜித் கதாபாத்திரத்தில்தான் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்துள்ளார். இதன் மூலம், விசாரணையின் போது அது யாருடைய மண்டை ஓடு என்பதைக் கண்டுபிடிக்க முயல்கிறார் சத்யஜித். மேலும் இறந்தவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது விபத்தில் இறந்தார் என்று விசாரணையை தொடங்குகிறார்.

விசாரணையில் அது இளம் பெண்ணின்  மண்டை ஓடு என்பது தெரியவந்தது, ஆனால் அவளை எப்படி அடையாளம் காண்பது என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கிறது. இறந்த பெண்ணை அடையாளம் காண்பதில் ஏ.சி.பி சத்யஜித் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். அதே நேரத்தில் அவர் என்ன மாதிரியான சூழ்நிலைகளை எதிர்கொண்டார்? அந்தப் பெண் யார்? என்பதுதான் இந்த படத்தின் மீதி கதைக்களமாகும்.

எந்த ஓடிடியில் உள்ளது ?

இந்த ‘போலீஸ் ஸ்டோரி 2’ படத்தைப் பார்க்க ஆரம்பித்துவிட்டால், அதை மீண்டும் பார்க்க மிகவும் பயமாக இருக்கும். இந்த படத்தின் கொலைகாரனைக் கற்பனை கூடச் செய்ய முடியாது. இதுதான் இந்தப் படத்தின் சிறப்பு. இந்தப் படம் 2021 இல் வெளியாகியிருந்தது. தற்போது அது அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் இருக்கிறது. வீக் எண்டில் குடும்பத்துடன் பார்ப்பதற்கு சஸ்பென்ஸ் நிறைந்த க்ரைம் திரில்லர் படமாக இது இருக்கும்,மறக்காமல் பாருங்கள்.

விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!
விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!...
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?...
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி...
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்...
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!...
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!...
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்...
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி...
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு...
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!...
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!...