Thug Life : மாஸ் வரவேற்பு.. தக் லைஃப் படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Thug Life Movie 2nd Day Box Office Collection : நடிகர் கமல்ஹாசன் எழுத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவரும் திரைப்படம் தக் லைஃப். இப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார். அதிரடி நடிகன் சிலம்பரசன் நடித்துள்ள இப்படத்தின் 2 நாள் வசூல் விவரம் பற்றி பார்க்கலாம்.

Thug Life : மாஸ் வரவேற்பு.. தக் லைஃப் படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தக் லைஃப் திரைப்படம்

Published: 

07 Jun 2025 17:10 PM

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகர்கள்தான்  கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் சிலம்பரசன் (Silambarasan) . இவர்கள் இருவரின் கூட்டணியில் கடந்த 2025, ஜூன் 5ம் தேதியில் வெளியான படம் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தினை கோலிவுட் சூப்பர் ஹிட் இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் தக் லைஃப் படத்திற்கு முன் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தின் வரவேற்பைத் தொடர்ந்துதான் கமல் மறறும் சிம்பு நடித்த தக் லைஃப் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் கதையை நடிகர் கமல்ஹாசன் எழுதியுகிறார், மேலும் இப்படத்தின் கதையை இயக்குநர் மணிரத்னமும் மாற்றியமைத்திருந்ததாகவும் கமல் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். இந்த திரைப்படத்தில் முன்னணி ஹீரோயினாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan)  நடித்திருந்தார், மேலும் நடிகைகள் அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி எனப் பல நடிகைகளும் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படமானது வெளியாகி 2 நாட்களைக் கடந்த நிலையில், படத்தின் மொத்த வசூல் குறித்துப் பார்க்கலாம். தக் லைஃப் திரைப்படமானது இரு நாட்கள் முடிவில் சுமார் ரூ. 52 கோடிகளை வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்தான தகவலைத் தினத்தந்தி தனது இணையதளத்தில் பகிர்ந்துள்ளது. சுமார் ரூ300 கோடியில் இப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இரண்டு நாட்களில் ரூ. 52 கோடிகளை மட்டும்தான் வசூல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தக் லைஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

முத்தமழை பாடல் நீக்கம் குறித்து ரசிகர்கள் :

மணிரத்னத்தின் இந்த படத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன், நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வான் போன்ற நடிகர்கள் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கடந்த 2025, ஜூன் 5ம் தேதியில் காலை 9 மணி காட்சிகளுடன் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டைத் தொடர்ந்து பிரபலமான “முத்த மழை” என்ற பாடலும் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீசிற்கு முன் சின்மயி பாடிய இந்த முத்தமழை பாடல் ட்ரெண்டான நிலையில், ரசிகர்கள் இந்த படத்தில் அந்த பாடலை அதிகமாக எதிர்பார்த்திருக்கின்றனர். ஆனால் இந்த பாடல் இப்படத்தில் இல்லை என்று தெரிய வந்துள்ளது, இணையத்தில் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தக் லைஃப் படம் எப்படி இருக்கு?

இந்த படத்தில் கமல் ஹசன் மற்றும் சிலம்பரசனின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது . மேலும் படத்தில் சிலம்பரசனின் மாஸ் என்ட்ரி திரையரங்கையே அதிர செய்தது என்றே கூறலாம். இந்த படம் ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்டு உருவாகியுள்ளது. இதில் கமல் கேங்ஸ்டராக இருக்கும் நிலையில், அவரின் இடத்திற்கு அடுத்து யார் வருவார் என்பதை குறித்துத்தான் இப்படத்தின் கதை நகர்கிறது. நடிகை திரிஷா இப்படத்தில் கமல்ஹாசனின், காதலியாக நடித்துள்ளார். மேலும் திரிஷாவின் மீது நடிகர் சிலம்பரசனும் ஆசைப்படுகிறார் . இந்த கதைக்களத்தைக் கொண்டுதான் தக் லைஃப் படத்தின் கதைக்களமானது நகர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.